
மின்சாரம் இல்லை
வழக்கம் போல.
காற்றே இல்லாதது போலிருக்கிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.
ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
மங்கலாய் எரிந்தபடி. ...தொடர்ந்து வாசிக்க ...

பெரிய தூங்குமூஞ்சி மரம்.
கவனித்து பார்த்தால் தான் தெரியும்
மரத்தில் திருடன் ஒருவன்
கட்டப்பட்டு இருப்பது.
மரத்தின் நிறமாய்
மாறி விட்டன
கயிறும்
திருடனும். ...தொடர்ந்து வாசிக்க ...

நகரம் கூட அழகாய் இருந்தது
ஜன்னல்களில்.
மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
ஜன்னலில் இருந்து குதித்து
தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
முகத்துடன் காத்திருந்தார்கள்
அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக. ...தொடர்ந்து வாசிக்க ...

பாரம் தரும் வலி.
கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம்.
பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம். ...தொடர்ந்து வாசிக்க ...

இலைகளின் சலசலப்பு போல
சில பேச்சரவம்.
மற்றப்படி
நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
பேரமைதி. ...தொடர்ந்து வாசிக்க ...

பெல்ட் உயரும் போது
அது
நரியின் வால்.
தயாராகும் போது
அது
பயந்து உறைந்து
அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
பாம்பு. ...தொடர்ந்து வாசிக்க ...

சற்று முன்பு பெய்த மழையின்
பளபளப்பில்
ஓர் இரயில் நிலையம்.
ஈரத் தரை விரிந்து கிடந்த
பிளாட்பார்மில்
சோகமுடன் அமர்ந்திருக்கிறாள்
அந்தப் பெண். ...தொடர்ந்து வாசிக்க ...

உலகில் இது வரை
இப்படியொரு கவிஞன்
இருந்ததுமில்லை;
இருக்கப்போவதுமில்லை
என மொழி வாழும் காலம் வரை
தன் பெயர் நிலைக்க வேண்டுமென
விரும்பினான். ...தொடர்ந்து வாசிக்க ...

இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது.
வழியும் சிகரெட் புகை
உடலில் எங்கோ கீதமிசைக்கிறது.
இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன
நரம்புகள்.
சூடாய் இறங்கும் தேனீர் பானம்
உடலிற்குள்
இளம் மழையின் அரவணைப்பு. ...தொடர்ந்து வாசிக்க ...

மது பான விடுதியிலே தன்னை நோக்கி இளிக்கும் ஆணை அலட்சியமாய் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறாள் ஒரு பெண். செவ்வாய்க்கிழமை மதியம் ஜன்னலைத் திறந்து வைத்து உள்ளே கட்டிலில் நெருக்கமாய் இருக்கிறார்கள் ஒரு கணவன் மனைவி. ஏரிக்கரையோரமாய் தன் மகனோடு அமர்ந்திருக்கிறார் ஒரு தந்தை. மதுக்கடைக்கு வெளியே காத்திருக்கிறார்கள் இரண்டு சிறுமிகள். சரியான பராமரிப்பும் மேற்பூச்சும் இல்லா செங்கற் கட்டிடத்தில் ஒரு பத்திரிக்கையை தலைகீழாய் வாசித்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒரு சிறுமி. வெயின் தன் புகைப்பட கருவியோடு கண்ணுக்குப் புலப்படாதவராய் மாறி விட்டார். ...தொடர்ந்து வாசிக்க ...