• மழை தூறல் என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்குகிறது.
    சட்டை பையில் இருக்கும் காகித தாளினை
    கைகளால் காப்பாற்றுவதற்கு யத்தனிக்கிறேன்.

    என்னை பயமுறுத்துவதற்காகவே
    மழை சடசடவென பெய்வதும் பிறகு நிதானிப்பதுமாய்
    விகாரமாய் சிரிக்கிறது.

    தைல மரக்காட்டில் தன்னந்தனியாய்
    பயத்தோடு நடக்கும் போது
    பின்னால் யாரோ தொடர்வது போல
    ஒரு நிழல் என் மனக்கண்ணில் என்னை தொடர்கிறது.

    இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள்
    அந்த நகரத்தில் கை மாற வேண்டும்.
    இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
    அந்த எண்ணமே என் உடலை நடுநடுங்க வைக்கிறது.

    திசையினை அனுமானித்து
    நகரத்தின் பக்கமாய்
    எனது நடையினை வேகபடுத்துகிறேன்.
    கைகள் அன்னிச்சையாக சட்டைபையினை தடவுகின்றன.

    மழைநீர் அந்த காகிதத்தில்
    மையினை கரைத்து
    எழுத்துகளை அழித்து இருக்குமோ?

    அந்த எண்ணம் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்
    அதே நேரம்
    அருகாமையில் தாங்கவியலா துர்வாசனை.
    புதர்களுக்கு பக்கத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது.
    ஒரு மணி நேரத்திற்கு முன் நான் பார்த்த அதே காட்சி.…மேலும் வாசிக்க


  • பெருவெள்ளமாய் மழை பொழுதுகள்
    நம்மை ஆட்கொண்டிருக்கும் நாட்கள் இவை.

    எனது மூக்கிலிருந்து
    மீண்டும் இரத்தம் சொட்ட தொடங்கி விட்டது.
    கை நகங்களின் நிறம்
    மாறி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
    பனி போர்த்திய கார் கண்ணாடி போல
    எனது பார்வை திறன் மங்கி கொண்டிருக்கிறது.

    சிறு செயல்கள் கூட
    மிக மெல்ல மிக மெதுவாக நடப்பதாக பிரமை.
    பெரும்பாலான சமயம் கண்களை திறந்தபடி
    நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
    கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
    ஒவ்வொரு முறையும்
    மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
    அதை பார்த்து கொள்கிறேன்.
    கறுப்பு பளபளப்பு மட்டும் தெரிகிறது.
    அசைவுகளே இல்லை வழக்கம் போல.

    எப்போதும் தீண்டும் என தெரியாது
    ஆனால் அவ்வபோது என்னை தீண்டி கொண்டே இருக்கிறது.

    மரணத்தை போல அசைவுற்று இருக்கும் அதனை
    பார்த்து கொண்டே இருக்கிறேன்.


  • வறுத்தாலும் சரி,
    கரித்து கொட்டினாலும் சரி,
    நக கண்களை பிடுங்கினாலும் சரி,
    உண்மை கசப்பானது தான்.

    நாம் வேறு மாதிரி தான் நினைத்து இருந்தோம்.
    நம்முடைய கடைசி ஆசை அதுவாக தான் இருந்தது.
    நம்முடைய துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
    அது தான் நம்முடைய உந்து சக்தியாக இருந்தது.

    ஆனால் உண்மை அதுவல்ல.
    யதாரத்தம் வேறு மாதிரியாக தான் இருக்கிறது.
    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.

    நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
    நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
    நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
    உன்னிப்பாய் கவனித்தால்
    அது சர்க்கஸ் முடியும் போது தோன்றும் கரகோஷம் என புரிந்து கொள்ளலாம்.

    அடித்தாலும் சரி
    நடித்தாலும் சரி
    உண்மை கசப்பானது தான்.
    மரணம் இனிப்பானது என எவன் சொன்னான்.
    இறப்பிற்கு பிறகு நம்மை கொண்டாடுவார்கள் என எவன் சொன்னான்.

    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.


  • கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று
    ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி.
    அந்த வலியோடு தான்
    தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

    எப்போதும் போல விழிப்பு வானத்தை பார்த்தபடி தான்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம் காட்டும் வானம்.
    ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான தின வாழ்க்கை தான் கிழவனுடையது.

    முதல் காரியமாய் தொலைந்து போன அவனது நாணயத்தை தேட தொடங்குவான்.
    ‘நடைபாதை, புல்வெளி, புதர்
    இவற்றை தாண்டி அந்த நாணயம் வேறு எங்கும் போய் இருக்காது.’
    அங்குலம் அங்குலமாய் அந்த பகுதிகளை அலசி கொண்டிருப்பான்.
    கற்களை மெல்ல புரட்டி பார்ப்பான், குழந்தையை தொடுவது போல.
    தேடல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் போதே வானம் இருட்ட தொடங்கி விடும்.
    நிலா ஒளியும், தெரு விளக்குகளும், இருட்டும் கிழவனை குளிப்பாட்டும்.
    ஆனாலும் தேடல் நடந்து கொண்டே இருக்கும்.

    முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது எனினும்
    கிழவன் எப்போதும் நாணயத்தை தேடி கொண்டே இருக்கிறான்
    ஒருவித லயிப்போடு.


  • நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

    தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

    இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண்.… …மேலும் வாசிக்க


  • மேகங்கள் திடீரென ஒரு நாள்
    வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

    ஆற்றுத்தண்ணீர் போல
    அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
    போர் விமானங்கள் போல
    சோகங்கள் போல
    ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
    மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
    எனக்கு பயமாக இருந்தது.

    தினமும் காலையில் கண் விழித்தவுடன்
    இன்றாவது மேகங்களின் போராட்டம்
    முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
    ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
    பார்க்க தொடங்கினேன்.

    ஆனால்
    முடிவே இல்லாத நீண்ட கனவாக
    அது மாறி கொண்டிருந்தது.

    அப்போது தான் அது நடந்தது…


  • நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம்.

    இந்தியாவின் நிலை இன்னும் மோசம்
    உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

    இந்தியா

    • 15 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
    • இந்தியாவில் ஏற்படும் 50% குழந்தைகளின் மரணம் சத்துணவு பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
    …மேலும் வாசிக்க

  •  

    கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

    வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

    அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை.

    …மேலும் வாசிக்க

  • 100 கிலோமீட்டர் வேகத்தில் மரணம்.
    கீழிருந்து உயர்ந்து செல்லும் மேம்பாலம் உச்சியில் முடிவடைய
    அதற்கு கீழே தனது அகலமான சேலையை விரித்து
    காத்திருக்கிறது கடல்.

    இது தற்கொலை மேம்பாலம்.
    யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று
    தற்கொலை செய்து கொள்ளலாம்.

    இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர்
    காண விரும்பும் இடம் இது தான்.
    சுற்றுலா பயணிகளுக்காகவே மேம்பாலத்தின் வடக்கே
    ஒரு திறந்த மண்டபம் அமைந்திருக்கிறது.

    அந்த மண்டபத்தினுள் இருந்து பார்த்தால்
    மேம்பாலத்தில் எப்போதுமே
    ஒன்றிரண்டு பைக்குகள் ஏறி கொண்டிருப்பதையும்
    அவர்களை விழுங்க அலைகளை கரகோஷமிட்டபடி
    கடல் துள்ளுவதையும் காணலாம்.

    கோடைக்காலம் இங்கு உகந்த காலம்.
    அச்சமயம் பத்து பனிரெண்டு பைக்குகள் கூட
    ஒரே சமயத்தில் மேம்பாலத்தில் ஏறி கொண்டிருக்கும்.
    சமயங்களில் டிராபிக் ஜாம் ஆவதும் உண்டு.

    மேம்பாலத்தின் கீழே நின்றிருக்கும்
    காவலாளியை கண்டு கொள்ளாதீர்கள்.
    அவனது வேலை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.
    அதுவும் அவன் கடலுக்கு எதிர் திசையில் தான்
    எப்போதும் பார்த்தபடி இருப்பான்.


  • ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

    தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

    இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.

    • 24இல் 2 கள்ள வோட்டு
    • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள்.
    …மேலும் வாசிக்க