இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான் இந்த தொடர்ச்சி.
இந்திய அரசாங்கத்தின் பதினொன்றாவது திட்ட அறிக்கை ஒரு முக்கியமான இலக்கினை வரைந்திருக்கிறது. நாட்டின் அடித்தட்டு மக்களுக்கும், விளிம்புநிலை மனிதர்களுக்கும் வளர்ச்சியின் பங்கு சரியான அளவு கொண்டு சேர்க்கபட வேண்டும் என்பது தான் அந்த இலக்கு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது சாதாரண காரியமாக இருக்க போவதில்லை. பெரும்பாலும் பேப்பர் திட்டங்களாக மலர்ந்து விடுமோ என்பது தான் இப்போதைய அச்சம்.
வளர்ச்சியின் பங்கினை கொடுப்பது என்பது எப்படி? இயேசு கிருஸ்து உன்னிடம் இரண்டு ரொட்டி இருந்தால் ஒன்றினை இல்லாதவனிடம் கொடு என்றார்.… …மேலும் வாசிக்க



