தெற்குக் கோபுரத்திலே கருணையும் குரூரமுமாய்
உறைந்து இருக்கிறார் பிரமிள்
காலபைரவனாய்.
காலிலே வெள்ளித் தாடிகளாய் இறகுகள்.
கால்களுக்குப் பின் நாயாய் உறுமுகிறது
மரணம்.
காதறுந்த ஓவியன் அவரைப் பார்க்கையிலே
இருவர் பார்வையும் ஒன்றிணைகையிலே
யார் யார் என்பது மறந்து
எது எது என்பது குழம்பி
எல்லாம் ஒன்றாகி
அந்த ஒன்றின் முகத்திலே காலத்தின்
புரியொணாப் புன்னகை!
வானம் பொய்த்ததா? மரணம் வென்றதா?
துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேன் என்னை!
Comments
One response to “மனநல காப்பகத்தில் இருந்து – 9”
-
[…] ←Previous: மனநல காப்பகத்தில் இருந்து – 9 Search […]

Leave a Reply