காலபைரவனின் முடிவுறா நடனத்தின் ஊடாக
பிளேட்டோவின் தேசத்தைக் குலைத்து
மறுதலிக்கப்பட்ட பழத்தைத் தின்று
சிலுவையில் அறையப்பட்டு
விஷத்தை அருந்த தண்டிக்கப்பட்டு
கண்கள் ஏங்கி உடல் மெலிந்து
மற்றவர்களின் எள்ளலுக்கு ஆளாகி
பதில் பெறா வலியோடு வாழும் அவர்களை
இன்றும் பார்க்கலாம் - காது அறுந்தவர்களை!
[முற்றும்]

Leave a Reply