அவளை முத்தமிடுவது போல என்னையும்

எங்கோ விலகி போய் விட்டது
என் இளமை பருவம்.
என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
இமை மூடுவதும் இல்லை.
அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.

என் பழைய தருணங்கள் உயிர்த்தது போல இருக்கிறீர்கள்
நீங்கள் இருவரும்.
காதலின் பிரகாசம்
உங்கள் மேலெல்லாம் இருக்கிறது.

என்னை ஒரு முறை
அவளை முத்தமிடுவது போல முத்தமிடுவாயா?

ஒரு கணம் மீண்டும் பிறப்பேன்.

நன்றி: Matrix திரைப்படம்