Tag: காதல்

  • எங்கோ விலகி போய் விட்டது
    என் இளமை பருவம்.
    என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
    இமை மூடுவதும் இல்லை.
    அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
    ஒவ்வொரு முறையும்
    ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.

    என் பழைய தருணங்கள் உயிர்த்தது போல இருக்கிறீர்கள்
    நீங்கள் இருவரும்.
    காதலின் பிரகாசம்
    உங்கள் மேலெல்லாம் இருக்கிறது.

    என்னை ஒரு முறை
    அவளை முத்தமிடுவது போல முத்தமிடுவாயா?

    ஒரு கணம் மீண்டும் பிறப்பேன்.

    நன்றி: Matrix திரைப்படம்


  • இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
    கண்களில் பரிவும் அன்பும்.
    உதடுகளில் பூக்கிறது காமம்.

    இரவு வானத்தில் தோன்ற போகிறது
    அந்த அரிய ஒளிக்கீற்று.
    உலகின் கடைசி தருணங்களை
    கணத்திற்கு கணம்
    மெதுவாக நகர்த்திட துடித்திடுவது போலொரு முத்தம்.

    நீரின் சிலிர்ப்பை மறந்து
    ஆவலாய் காத்திருக்கின்றன
    ஒன்றை போலவே இருக்கும் அந்த ஏழு தவளைகளும்.
    கல்லாக மாறி போயிருக்கின்றன அந்த காத்திருத்தல்.

    எங்கோ கல் ஒன்று
    சரிந்தோடி பள்ளத்தில் இருக்கும் நீரில் விழுந்து
    அமைதியை குலைக்கிறது.
    வானம் இருளினை விழுங்கி தயாராகிறது.


  • பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களைப் பற்றி புரணி பேசுதல் என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டீவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச்சை இருவரும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தோம். மது அருந்தும் போது பேச்சு ஒரு கூடுதல் போதையூட்டி. அதனால் நண்பன் மீண்டும் பேச தொடங்கினான்.

    “உனக்கு பாண்டியன் நினைவிருக்கா?” என நண்பன் டீவி திரையில் இருந்து கண்களை அகற்றாமல் கேட்டான். நான் பதில் பேசுவதற்குள் அவனே மீண்டும் பேச தொடங்கினான்.

    “பாண்டியனைக் பட்டிக்காட்டான், பட்டிக்காட்டான்னு நாம எல்லாரும் கிண்டல் பண்ணோம் நினைவிருக்கா.”

    கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன்.… …மேலும் வாசிக்க


  • ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிந்த போது எனக்கு கல்யாண் என்னும் மனிதரின் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிற்கு 35 வயதிருக்கும். சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் அவ்வப்போது நடித்து கொண்டிருப்பவர். தவிர ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவிதமான வேலை செய்து பிழைத்து கொண்டிருப்பவர்.

    சில வருடங்களுக்கு முன்பு கல்யாணிற்கு ஒரு பெண் மீது காதல் பிறந்தது. அது பிறந்த இடம் தான் கொஞ்சம் வித்தியாசமானது. மும்பையில் நண்பர்களுடன் காப்ரே நடனம் பார்க்க சென்ற கல்யாணிற்கு அங்கு நடனமாடிய ஒரு தமிழ் பெண்ணைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் பிறந்து விட்டது. அதற்குப் பிறகு வெகு பிரயத்தனப்பட்டு அந்தப் பெண்ணின் அபிமானத்தை பெற்று, அவளது தாயிடம் நற்பெயரைப் பெற்று தன் குடும்பத்தின் எதிர்ப்பிற்கிடையே அந்தப் பெண்ணையே மணந்து கொண்டார்.

    கல்யாணிற்குத் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு தான், தன் மனைவி ஏற்கெனவே ஓர் ஆளுடன் வாழ்ந்து கொண்டிருந்த விவரம் தெரிய வந்தது. என்றாலும் திருமணத்திற்குப் பிறகு அது போல எதுவும் நேர கூடாது என மனைவியை எச்சரித்து அவளுடனே வாழ தொடங்கினார்.… …மேலும் வாசிக்க