Tag: வாசகர்-டாப்10

  • இன்று மதியம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஓர் இளைஞர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசரம் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தேன்.

    “பில்டிங்கே ஆடுது,” என்று அந்த இளைஞர் மொத்தமாய் தெருவைப் பார்த்து சொன்னபோது அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்று மனதில் தோன்றியது. ஆனால் அதே சமயம் பல கட்டிடங்களில் இருந்து பலர் வெளியே அவசர அவசரமாய் வருவதைப் பார்த்தவுடன் சின்ன அளவிலான நிலநடுக்கம் வந்திருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் சென்னையே பரபரப்பானது.

    இந்தோனிசியாவில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்திய கிழக்கு கடற்கரை முழுவதும் சின்ன அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், சுனாமி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்தன.

    மெரீனா கடற்கரைக்கு போன போது அங்கு காவல்துறையினர் கடற்கரை மணலில் இருந்தவர்களையெல்லாம் அவசர அவசரமாய் வெளியேற்றி கொண்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்தும் பள்ளிகளிலும் இருந்தும் மக்கள்கூட்டம் வேக வேகமாய் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தனர்.… …மேலும் வாசிக்க


  • குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    அவர் ஒரு புகைப்பட கலைஞர். பாரீஸ் நகரத்தில் அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் புகழ் பெற்ற ஓவியர்களுக்கு நிர்வாணமாக காட்சி கொடுத்து புகழ் பெற்றவர். பல புகழ்ப் பெற்ற ஓவியங்களில் அந்தப் பெண்ணைக் காண முடியும்.

    “உங்களைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

    “புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அது வெறும் யதார்த்தத்தினைச் சித்தரிக்கிறது. ஓவியங்கள் அப்படியில்லை,” என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.

    “என்னுடைய புகைப்படங்கள் அப்படி இல்லை. ஓர் ஓவியர் எப்படி ஒரு காட்சியைத் தன் கலாபூர்வ நோக்கங்களுக்காக மாற்றுகிறாரோ அப்படி என்னுடைய புகைப்படங்களை நான் ஓவியம் போல தான் எடுக்கிறேன்,” என்றார் அவர்.

    இந்த உரையாடல் இன்று மீ-யதார்த்தம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் முக்கியமானது. காரணம் அந்தப் புகைப்பட கலைஞர் தான் சொன்னதைப் பிறகு செய்தும் காட்டினார். அவர் அந்தப் பெண்ணை வைத்து எடுத்த புகைப்படம் ‘Violon d’Ingres.’… …மேலும் வாசிக்க


  • வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவன் அந்த டாங்கியைப் பார்த்து எதோ சொல்கிறான் என புரிந்து கொள்ள முடிகிறது. அவனது செயலைக் கண்டு பீரங்கி டாங்கி குழம்பி போய் சற்று நேரம் நின்று பிறகு மீண்டும் அவனைத் தவிர்த்து சற்று திரும்பி தன் வழியில் செல்ல எத்தனிக்கிறது. ஆனால் அந்த இளைஞனோ மீண்டும் மீண்டும் அந்த மிருகத்திற்கு முன்னால் போய் நிற்கிறான்.… …மேலும் வாசிக்க


  • அகதிகள் முகாம்
    அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.

    அது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து கொண்டிருந்த காலம். ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் இருந்தும் வறுமையில் இருந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்படி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தவர்களுக்கான அகதிகள் முகாம் இது. நசீர் பாக் முகாம் என்று அந்த இடத்திற்கு பெயர். நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக ஸ்டீவ் அங்கு வந்திருக்கிறார்.

    அகதிகள் முகாமில் ஒரு டெண்டிற்குள் ஒரு தற்காலிக வகுப்பறையை உருவாக்கி இருந்தார்கள்.… …மேலும் வாசிக்க


  • எங்கோ விலகி போய் விட்டது
    என் இளமை பருவம்.
    என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
    இமை மூடுவதும் இல்லை.
    அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
    ஒவ்வொரு முறையும்
    ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.

    என் பழைய தருணங்கள் உயிர்த்தது போல இருக்கிறீர்கள்
    நீங்கள் இருவரும்.
    காதலின் பிரகாசம்
    உங்கள் மேலெல்லாம் இருக்கிறது.

    என்னை ஒரு முறை
    அவளை முத்தமிடுவது போல முத்தமிடுவாயா?

    ஒரு கணம் மீண்டும் பிறப்பேன்.

    நன்றி: Matrix திரைப்படம்



  • கறுப்பு எறும்புகள்.
    முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல
    சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
    எறும்புகளைப் பார்ப்பதும்
    பிறகு
    அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
    இன்று எனது கணவரின் பிறந்த நாள்.
    இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான்
    வழக்கம் போல ஒரு குழப்பம்.

    அவசரம்! எமர்ஜென்சி!

    அலுவலக வெள்ளைப் பலகையை
    எறும்புகள் மொய்த்திருப்பது போல இருக்கின்றன
    அதில் எழுதப்பட்டிருக்கும்
    என்னுடைய வேலைகள் மற்றும் கடமைகள்.

    கடவுள் இன்றும் லேட் தான்.
    வந்தவர் மதியத்திற்கு மேல்
    எங்கு போனார் என்று தெரியவில்லை.
    செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது.
    மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    கணவரிடம் என்ன பொய் சொல்வது என குழம்பியபடி அமர்ந்திருக்கிறேன்.
    இன்னும் நானூறு வருடங்கள் உழைத்தாலும் கூட
    இந்த மாத டார்க்கெட்டை
    என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.

    முதுகு வலி!

    நான் அமர்ந்திருக்கும் பத்தாவது மாடி அறையின்
    ஜன்னலுக்கு வெளியே
    ரோஜா செடிகள் போல
    ஒரு பிரம்மாண்ட மரத்தின் உச்சி தெரிகிறது.
    …மேலும் வாசிக்க


  • சிலி சுரங்க மீட்புலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.

    கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.

    “ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.

    “சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான்.… …மேலும் வாசிக்க


  • இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது.

    ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில் தான் பெரும்பாலும் இருக்கும். யாகூவில் அப்போது geocities என்றொரு பகுதி இருந்தது. அதாவது இணையத்தில் இலவசமாய் உங்களுக்கென்று ஓரிடம். இப்போது blogspot போல என வைத்து கொள்ளுங்களேன். முதலில் நமது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு இணையத்தில் இலவசமாய் இடம் கொடுப்பார்கள். அதாவது எனக்கு கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் என்றால் பாரீஸ் என்கிற இடத்தில் (yahoo.com/geocities/paris/0968 என்பது போல) இடம் கொடுப்பார்கள். (இதைப் பற்றி எழுத்தாளர் அம்பை கூட எதோ ஒரு கதையில் குறிப்பிட்டு இருப்பதாக ஞாபகம்.)… …மேலும் வாசிக்க


  • அவரது பெயர் அபிநயா. நாற்பது வயதாகிறது. தோற்றத்தில் இன்னும் முதுமை எட்டி பார்க்கவில்லை. கண்களில் மட்டும் எப்போதும் ஒரு லேசான சோர்வு. கணவனுடன் தனி குடித்தனம். இரண்டு குழந்தைகள். ஒரு பையன். ஒரு பெண். மூத்தவனுக்கு பதினைந்து வயதாகிறது.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போன்ற வாழ்க்கை. கணவர் அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஸ்கூட்டர் பைக்காக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு காராக மாறி இருந்தது. சொந்த வீடு கனவு நனவாகி விட்டது. மிக்ஸி, கிரைண்டர் என சாமான்களும், தங்க நகைகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பெட் ரூமில் ஏஸி மாட்டினார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடும்பமாய் காரில் வெளியே எங்காவது போய் சுற்றி விட்டு வீடு திரும்புவார்கள். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம். வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என ஓர் எண்ணம் உண்டு. இன்னும் கைக்கூடவில்லை.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போல தான் வாழ்ந்து வந்தார் அபிநயா.… …மேலும் வாசிக்க


  • பேய், திகில், அமானுஷ்யம், திரில்லர் என்கிற மூடில் கதை வாசிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இந்த கதையை வாசிக்க வேண்டாம்.

    நண்பர் யெஸ்.பாலபாரதி தன்னுடைய விடுபட்டவை வலைத்தளத்தில் பேய் வீடு என ஒரு சிறுகதையை பதித்திருக்கிறார். அதனை படித்தவுடன் எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம். அதே கதையை நான் மளமளவென எனது நடையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விட்டேன். இன்னொருத்தர் கதையை இப்படி உரிமை கொண்டாடுவது தவறு தான். என்றாலும் கதை என் மீது செலுத்திய தாக்கமே இதற்கு காரணம்.

    இப்போது என் கதையை படிக்கும் போது பாலபாரதியின் கதைத்தலே சிறப்பாக இருக்கிறது என்றும், நான் தேவையில்லாமல் அதனை பாடுபடுத்திவிட்டேன் என்றும் தோன்றுகிறது. என்றாலும் எது சரி, எது தவறு, காரணம் என்ன போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கதையை பதிக்க அனுமதி அளித்த நண்பர் யெஸ்.பாலபாரதிக்கு நன்றி. இந்த கதையை படிப்பதற்கு முன் வாசகர்கள் அவரது பேய் வீடுகதையை படித்துவிடுதல் வாசிப்பனுபவத்திற்கு உகந்ததாக இருக்கும்.

    …மேலும் வாசிக்க