சுயத்தை மறத்தல்
நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
கலைந்த தலைமுடி.
தாடி.
இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
குப்பையில் எறிவதற்கு முன்
கவனமாய் காகிதங்களை
மடித்து மடித்து வைக்கிறான்
தினந்தோறும்.
சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
பழைய பில்கள்,
என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
மற்றும்
அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.
காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
ஒவ்வொரு எழுத்தாய்.
சுயத்தை மறத்தல்…
நான்கைந்து நாட்களாக ஒரே உடை. கலைந்த தலைமுடி. தாடி. இமைக்காதது போல அலைபாயும் கண்கள். சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்….
கவிதை அருமை
@வேலு – வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
காகிதத்திலிருந்து உதிரும் எழுத்துக்கள் அருமை சாய்.
@சந்திரா இப்ப தான் வழி தெரிஞ்சுதா? 🙂
நண்பா உங்களின் எல்லா பதிவையும் படித்துவிட்டேன். அது என்னமோ நான் கருத்து போட்டேன் வரவே இல்லை. வலைப்பதிவு முகவரியை மாற்றியது முதற்கொண்டு கவனித்து வருகிறேன். அதுவும் நீங்கள் வலைப்பதிவு முகவரி மாற்றிய அன்று உங்கள் வலைப்பதிவு ஹேக்கிங் செய்யப்பட்டது அது தொடர்பான உங்கள் கட்டுரை, ‘ப்ளஸ் டூ தேர்வு முடிவு’ தொடர்பான கட்டுரையின் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடுமையான விசயங்களைக்கூட சுவாரஸ்மாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவாவது வலையேற்றுங்கள்.
@சந்திரா – நீங்க அவ்வளவு நல்லவங்களா? ஸாரி எனக்கு தான் அது தெரியாமா போயிடுச்சு!