Tag: உளவியல்

  • நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
    கலைந்த தலைமுடி.
    தாடி.
    இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
    சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
    குப்பையில் எறிவதற்கு முன்
    கவனமாய் காகிதங்களை
    மடித்து மடித்து வைக்கிறான்
    தினந்தோறும்.

    சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
    பழைய பில்கள்,
    என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
    மற்றும்
    அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.

    காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
    ஒவ்வொரு எழுத்தாய்.


  • ‘கதையல்ல நிஜம்’ என்று சில வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நான் பணிபுரிந்த போது சந்தித்த மனிதர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல கடிதங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரும். அப்படி வரும் கடிதங்களைத் தொகுத்து கோப்புகளாக பராமரித்து வந்தார்கள். ஒரு நாள் யதேச்சையாக ஒரு பழைய கோப்பினைப் புரட்டி கொண்டிருந்த போது ஒரு கடிதத்தினைப் பார்த்தேன். தெளிவான கையெழுத்தில் முழு நீள வெள்ளைத்தாளில் எட்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

    “என் பெயர் கிருஷ்ணன்,” என தொடங்கியது கடிதம். கடிதத்தின் சுருக்கத்தைக் கீழே தந்து இருக்கிறேன்.

    கிருஷ்ணனுக்கு இப்போது முப்பத்தி இரண்டு வயது. ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொல்லப்பட்டது கணக்கு வேலை. ஆனால் அவரை வேறு வேலைகள் செய்ய அந்த நிறுவனத்தில் நிர்பந்தம் செய்து வந்தார்கள்.… …மேலும் வாசிக்க


  • செய்யும் காரியத்தில் மோகம். சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருத்தல். இல்லாவிட்டால் செய்யும் வேலையில் மோகம். உணவு உறக்கமின்றி வேலையிலே இருத்தல். சினிமாக்கள் பார்க்க தொடங்கி விட்டால் அப்படியே சினிமாக்களிலே லயித்திருத்தல். இப்படியாக ஒரு காரியத்திலே அதீத மோகத்தில் திளைத்திருப்பது பலருக்கு நடப்பது தான். இந்த அதீத மோகம் ஓர் எல்லையை தாண்டினால் மனநோயாகி விடுகிறது என்கிறார்கள். அதில் ஒரு வகை மனவியாதியின் பெயர் Obsessive Compulsive disorder. தமிழில் இதைக் கட்டுப்படுத்தவியலா பிளவுபட்ட மனநோய் என்கிறார்கள்.

    இன்னொரு எளிதான விளக்கம், கைகளைக் கழவினால் கழுவி கொண்டே இருப்பதான ஒரு மன வியாதியைப் பல பேர் கேட்டு இருக்கக்கூடும். பூட்டு போட்ட பிறகு பூட்டு சரியாக போடப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து கொண்டே இருப்பது. பூட்டிய பிறகு ஒரு முறையோ இரு முறையோ அல்லது மூன்று முறை இழுத்து பார்ப்பது கூட மன பிரச்சனை அல்ல. ஆனால் நடு இரவு தூக்கத்தில் இருந்து எழுந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து பூட்டை இழுத்து பார்த்தால் மனப் பிரச்சனை இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.… …மேலும் வாசிக்க