பிரதி

மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்

நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்

கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

முப்பாட்டனுக்கு அது தெய்வம்.

பாட்டனுக்கு அது துரதிர்ஷடம்.

அப்பாவுக்கு அது கல்.

எனக்கு காதல் சின்னம்.

ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரதியை எடுத்து கொள்ள

சிற்பியின் பிரதி அவனோடே மாண்டு போனதோ?