பிரதி

மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்

நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்

கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

முப்பாட்டனுக்கு அது தெய்வம்.

பாட்டனுக்கு அது துரதிர்ஷடம்.

அப்பாவுக்கு அது கல்.

எனக்கு காதல் சின்னம்.

ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரதியை எடுத்து கொள்ள

சிற்பியின் பிரதி அவனோடே மாண்டு போனதோ?


Comments
2 responses to “பிரதி”
  1. பொன். தனபாலன் Avatar
    பொன். தனபாலன்

    வணக்கம்…

    வித்தியாசமான சிந்தனை வரிகள்… நன்றாக முடித்துள்ளீர்கள்… அருமை…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

    வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_11.html) சென்று பார்க்கவும்…

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க…

    (இன்னும் தங்களின் சில பதிவுகள் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன… படித்தேன்…)

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    1. நீங்க சொல்லி தான் வலைச்சரத்தில் என்னைப் பத்தி சமீபத்துல எழுதுனது தெரியும். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.