சாய் ராம் என்னுடைய பெயர். என்னுடைய படைப்புகளை பதிக்கவும், நடப்பு செய்திகளை பற்றி விவாதிக்கவும், சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைப்பதிவு. மேலே navigation bar-இல் உள்ள சுட்டிகள் வழியாக தளத்தை சுற்றி வரலாம். கீழே வலதுபக்கம் இருக்கிற படத்திற்கு மேலே உள்ள ஐந்து புள்ளிகளில் ஏதேனும் ஒன்றைச் சுட்டினால் featured posts-யினை காணலாம்.
Featured Post
மனிதர்கள் – ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது
எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேலே மதுக்கடையை சுற்றி கும்பலாய் ஆட்கள் குழுமி இருப்பார்கள். அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். தொடர்ந்து வாசியுங்கள்...
பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை
பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
யாரென தெரியவில்லை.
இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை. தொடர்ந்து வாசியுங்கள்...
விழிப்பே இல்லாத கனவு
தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன். தொடர்ந்து வாசியுங்கள்...
வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?
தமிழகத்தில் வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தொடர்ந்து வாசியுங்கள்...
பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை
ஒரு நாள் மதியம், கடற்கரையில் கதை பேசி அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அந்த அழகிய இளம் மனைவி உடலெல்லாம் தீ பற்றி எரிய கடலை நோக்கி ஓடுவதை பார்த்தார்கள். கடலுக்கு கொஞ்சம் முன்னாலே அவள் சுருண்டு விழுந்து விட்டாள். தொடர்ந்து வாசியுங்கள்...
Recent Posts
யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை
முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம்.
நினைக்கும் போதெல்லாம்
உடலினுள் பரவுகின்றன
உணர்வலைகள்.
முகங்கள்
ஏனோ நினைவில் இல்லை.
வலை வீசி தேடினால்
சிக்குவது
உருக்குலைந்து போன ஓவியங்களே.
என் முகமும்
மறந்து போயிருக்குமென நினைக்கையில்
துளிர்க்கிறது
பெருமூச்சோடு
சிலசமயம் மகிழ்ச்சி.
- கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில் 1 Reply
- உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள் 1 Reply
- மனிதர்கள் – முசுடு கிழவி Leave a reply
- என்னுள் எங்கோ Leave a reply
- இருத்தல் 1 Reply
- வேட்டையாடு விளையாடு 1 Reply
- பயம் Leave a reply
- 700 கோடி மக்கள்தொகை ஒரு பொய் Leave a reply
- உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் Leave a reply