வானம் என்பது கற்பிதம்!என் ஜன்னலில் இருந்து தெரியும் மற்றொரு சாளரம்!சாளரத்தில் காணும் அரைகுறை அண்டம்!அண்ட வாயுகளின் மண்டலம்!நீளம் குறைந்த நீலம்!தொலைவுகள் தொலைந்திட்ட தூரம்!ஓளிகளின் நாட்டியம்!இறந்த காலத்தின் ஓவியம்!வண்ணங்களின் முடிவுறா சித்திரம்!இருண்மையின் கோலம்!நேரத்தினைச் சுட்டும் கடிகாரம்!காலங்களைத் தீட்டும்உருவமில்லாத உருவம்!நீளமும் அகலமும் ஆழமும் உறைந்திட்டமறை ஆற்றலின் வீரியம்!மாயைகளிலிருந்து விடுவிக்கும் கைவல்யம்!
Comments
One response to “மனநல காப்பகத்தில் இருந்து – 1”
-
அருமை.. வானத்தை வண்ணமிகு வார்த்தைகளால் வரைஞ்சிருக்கிங்க..

Leave a Reply