• அவ்வபோது பார்க்கும் காட்சி தான்.
    ஆனால் இன்று
    வேகமாய் நகரும் மேகங்களை பார்க்கும் போது
    வானமே இடிந்து கீழே விழுவது போல
    பிம்பம் உருவாகிறது.

    என் சிறு வயதில் பார்த்த
    ரயில் நிலையத்தருகே கூடி
    சிறிது நேரம் அரட்டையடித்து திரும்பும்
    முதியவர் கூட்டம் பற்றி அவ்வபோது நினைப்பதுண்டு.
    சில சமயம் அதை மேற்கோளாக காட்டி எல்லாம் பேசியதுண்டு.
    ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
    உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
    சமீபத்தில் தான் தோன்றியது.

    தினமும் போகும் பாதை தான்.
    ஒரு நாள் வேறு திசையில் இருந்து வரும்போது
    அது முற்றிலும் அன்னியமானதொரு சாலையாக மாறுகிறது.

    தினசரி புழங்கும் இடங்களில் கூட
    திடீரென ஒரு நாள் முளைக்கின்றன
    பெரிய கட்டிடங்கள்.

    என்னுள் எங்கோ
    திடீர் விழிப்பு
    திடீரென நிகழ்ந்து
    பிறகு கரைந்து போய் விடுகிறது.


  • “நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

    “கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

    “எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

    “இருக்கிறேன்.”

     


  • அது ஒரு விளையாட்டு.
    ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
    எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.

    கண்களோடு கண்கள் கோர்க்கப்படும் போது
    அங்கு கவிழ்கிறது ஒரு பேரமைதி.
    ஒரு கணம் தான் எனினும்
    அது ஒரு சலனமற்ற அகண்ட நீர்ப்பரப்பு.
    முதல் கல் விழுவதற்கு முன் வென்றாக வேண்டும்.


  • இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
    நடுவில் நெருப்பு வளர்த்து
    பெருகுது சத்தம்!
    யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
    தீக்குண்டத்தில்!
    நடுங்கி நிற்கிறேன் நான்
    கூட்டதிற்கு வெளியே!


  • இன்று முதல் உலக மக்கள்தொகை 700 கோடியாக  உயர்ந்து விட்டது என எல்லா ஊடகங்களும் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. உத்தரபிரதேசத்தில் அந்த சிறப்பு குழந்தை பிறக்க போகிறது என சொல்கிறார்கள். பிலிப்பைன்ஸில் குழந்தை பிறந்து விட்டதாக அந்த ஊர் ஊடகம் சொல்கிறது. எங்கே எங்கே அந்த 700 கோடியதாக உலகிற்கு வருகை தரும் அந்த மனித பிறவி? ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலை சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்கள்தொகை 700 கோடியை தொடுவதற்கு இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம் என்பது தான் உண்மையாக இருக்கக் கூடும்.

    ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பு இந்த மக்கள் தொகை பிரிவு. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர்கள் மக்கள்தொகை பற்றியும் அதன் பாதிப்புகளை பற்றியும் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மீது மற்றவர்களது கவனத்தை ஈர்க்க இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதியை 700 கோடியாக மக்கட்தொகை உயரும் தினமாக அறிவித்தார்கள். ஆனால் இந்த கணக்கு அறிவியல்பூர்வமானது அல்ல: ஆறு மாதங்கள் முன்பின் இருக்கலாம் என்பதை ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை பிரிவு அதிகாரிகளே ஒப்பு கொள்கிறார்கள்.… …மேலும் வாசிக்க


  • உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நிகராக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு நிகராக பணம் விளையாடுகிறது. அன்பளிப்புகளுக்கும் பஞ்சமில்லை. அதிமுக, திமுக, ஏனைய அரசியல் கட்சிகள் இந்த உள்ளாட்சி தேர்தலை மிக முக்கியமாக பார்ப்பதால் அவர்களின் பிரச்சாரங்கள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

    அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை ஆக்ரமித்து கொள்வதால் வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயித்தபிறகு கட்சிகளுக்கு உண்மையான ஆட்களாக இருப்பார்களே அன்றி தங்கள் பகுதி மக்களுக்கு உண்மையானவர்களாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும். (மேலும் வாசிக்க; உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்)

    அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ… …மேலும் வாசிக்க


  • சமீபத்தில் நண்பர் சந்தானமூர்த்தி மூலமாக அ.மார்க்ஸ் மற்றும் 17 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் பரமக்குடி வன்முறை தொடர்பான அறிக்கை வாசிக்க கிடைத்தது. துப்பாக்கிச்சூடு மாதிரியான அதீத நடவடிக்கைக்கு முன் தயாரிப்போடு தான் காவல்துறையினர் சம்பவத்தன்று வந்திருந்தார்கள் என குற்றம் சாட்டுகிறது அறிக்கை. சாதிய மனநிலை எப்படியெல்லாம் எல்லா மட்டங்களிலும் ஊடூருவி இருக்கிறது என்பதையும் அது தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறி இயக்கத்தை எப்படி உருவாக்குகிறது என்பதையும் இந்த அறிக்கையை வாசித்தால் புரிந்து கொள்ளலாம் … மேலும் முழு அறிக்கையை வாசிக்க

    அந்த அறிக்கையின் மைய நோக்கத்தை தவிர்த்த வேறு இரண்டு விஷயங்கள் எதோ என் கவனத்தை ஈர்த்து கொண்டே இருந்தன.

    பள்ளிக்கூடங்களில் சாதி

    மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர்.

    …மேலும் வாசிக்க

  • இந்த முறை உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் போல பரபரப்பாக இருக்கிறது. தெரு தெருவாக பிரச்சாரம் தினமும். கட்சி துண்டுகளை அரசியல் தலைவர் ஸ்டைலில் அணிந்து வேட்பாளர்கள் தங்கள் அடிபொடிகளுடன் வலம் வரும் போது அவர்கள் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்களா அல்லது எம்.எல்.ஏ பதவிக்கா என வியப்பு மேலோங்குகிறது. இத்தனை அடிபொடிகள், தேர்தல் அலுவலகம், வண்ணச் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் செலவு கணக்கு கட்டாயம் பெரிதாக தான் இருக்குமென புரிகிறது.

    எதற்காக இத்தனை செலவு?

    சென்னையில் வார்டு கவுன்சிலர் பதவியே அதிகாரமிக்கது என்கிறார் ஒரு நண்பர். வார்டில் எந்த வேலையாக இருந்தாலும் காண்டிராக்ட் எடுப்பவர் வார்டு கவன்சிலருக்கு 25 சதவீதம் கொடை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கிறார். மற்றவர்களுக்கு கொடை கொடுத்தது போக அதிகபட்சமாக மிச்சமிருப்பது 60 சதவீதம் அல்லது 65 சதவீதம் தான். அதில் என்ன உருப்படியாக வேலை செய்து கொடுத்து விட போகிறார்கள்?… …மேலும் வாசிக்க


  • பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. உயிர்பலி வேதனைக்குரியது. இச்சம்பவத்தில் சாதி மனநிலை மிகுந்து இருப்பதை மறைக்கவே முடியாது.

    துப்பாக்கி சூட்டை ஆதரித்து பேசிய முதல்வர் தொடங்கி, மருத்துவமனையில் போய் அட்மிட் ஆன போலீஸ் உயர் அதிகாரிகள், வருட வருடம் விழாவிற்கான அனுமதி/உதவி ஆகியவற்றை சரியான சமயத்தில் தர மறுத்து, சம்பந்தபட்டவர்கள் கோர்ட் படியேற காரணமான அரசு அதிகாரிகள், விழாவில் கலவரம் வரும் என எதிர்பார்த்து அப்படி வந்தால் ஆக்ரோஷமாய் செயல்பட வேண்டுமென தீர்மானித்த அதிரடிப்படை தலைவர்கள், துப்பாக்கி சூடு நிகழ்த்திய போலீஸ்காரர்கள், பிணத்தை எதோ விறகுகளை சுமந்து செல்வது போல தூக்கி கொண்டு வந்த காவலர்கள், இவனுங்க விழாவுல அப்படி ஆட்டம் போடுவானுங்க அதனால் தான் சுட்டிருப்பானுங்க என டீக்கடையோரம் பேசும் நபர்கள் என சாதி மனநிலை என்பது எங்கோ ஆழத்தில் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அது கட்டுபடுத்த முடியாமல் வக்கிரத்துடன் பல இடங்களிலும் வெளிபடவும் செய்கிறது என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
    அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.

    அவள் எங்களை கடந்தாள்.
    வெள்ளை.
    பிரகாசம்.
    வெளிச்சம்.
    இளமையின் உயிர்ப்பு.

    அவளது முகத்தை சோகமே திரையிட்டிருந்ததை பார்த்தோம்.
    எங்கள் இரைஞ்சும் கண்களை உணர்வின்றி பார்த்து விட்டு
    அவள் அவனை நோக்கி நடந்தாள்.

    அவன் பார்ப்பதும்
    திணறுவதும்
    கூத்தாடுவதும்
    இறுதியாய் மண்டியிடுவதையும்
    எங்களால் உணர முடிந்தது.

    எங்கள் அம்புகளை தயாராக்கினோம்.