Category: கவிதைகள்
-
எப்போதும்
ஒரு கோப்பை தேநீர், துளிர்த்து தொடங்கும் காமம், வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள், என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
-
அட போங்க!
உங்கள் கண்காணிப்பில் நல்ல மனிதனாக வாழ்வதை விட சுதந்திரமாக கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்! அட போங்க அப்பால!
-
கால்கள் சொல்லும் கதைகள்
நடுங்கும் மெலிந்த கால்களில் எப்போதும் கொலுசுவின் பல்வரிசையில் பொய் முத்துகள் சில காணாமல் போயிருக்கும்.
-
தெருவைப் பார்த்தபடி ஒரு ஜன்னல்
எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் சாலைக்கு அப்பால் சுவரில் பிரகாசிக்கும் ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின் சினிமா போஸ்டர்.
-
புகையால் ஆன பாதை
ஓடி கொண்டிருக்கிறேன் தூரத்தில் மரங்களால் ஆன குகைக்குள் தார் சாலையில் பயணிக்கும் பேருந்தினை நோக்கி.
-
முள்
முட்கள் முளைப்பது முள்செடிக்கும் வலிக்கும் என்பது என் உடலில் முட்கள் முளைத்த போது தான் புரிந்தது. முட்செடியாய் இருப்பது அதற்கு விருப்பமில்லை என்பதும்.
-
சட்டைகள் யாரைத் தேர்ந்தெடுக்கும்?
ஷோரூமில் பார்ப்பதற்கும் வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும் சட்டைகள் வித்தியாசமாக தான் காட்சியளிக்கின்றன.
-
கண்ணீரும் அழுகையும் தேவைப்படும் போது வாய்ப்பதில்லை
நான் அழ வேண்டிய தருணங்களில் அழுவதில்லை. சாவு வீடுகளில் கூட. என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக சட்டென அழுகை வருகிறது.