இந்த வலைப்பதிவு & நான்
சாய் ராம் என்னுடைய பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகள். தவிர ஜெயா டிவி, சன் நியூஸ் நிகழ்ச்சிகளுக்காக பணிபுரிந்ததும் உண்டு. விஜய் டிவியில் ‘நடந்தது என்ன’ ‘என் தேசம் என் மக்கள்’ போன்ற நிகழ்ச்சிகளின் இயக்குநர்.
- மேலும் என்னைப் பற்றி அறிய விரும்பினால் என்னுடைய முகநூல் பக்கத்தினைப் பார்க்கவும்.
- டிவிட்டரில் என்னைத் தொடரலாம்
கவிதைகள், கதைகள் என்று படைப்புலகில் ஆர்வமுண்டு. நடப்பினைக் கண்டு கருத்துகள் சொல்வதுண்டு. இதற்கான தளமே இந்த வலைப்பதிவு.
இந்த வலைப்பதிவில் என்ன வாசிக்கலாம்?
- மனிதர்கள் தொடர் – இது உண்மை கதாபாத்திரங்களைப் புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. (வலைப்பதிவில் வெளியான மனிதர்கள் பத்திகளைத் தொகுத்து மின்னூல்லாக நூலினி வெளியிட்டிருக்கிறது. இந்தப் இ-புத்தகத்தினை இலவசமாகவோ அல்லது விரும்பிய பணம் கொடுத்தோ வாங்கி கொள்ளலாம்.)
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் – எண்ணிக்கையில் அதிகமாகிவிட்ட எனது கவிதைகளில் ஐந்தினை மட்டும் தேர்வு செய்திருக்கிறேன். பிடித்திருந்தால் பிறகு மற்ற கவிதைகளையும் படிக்கலாம்.
- உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை – புகைப்படங்களின் கதை
- வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல – ஜனநாயகம் என்கிற கருத்தாக்கத்தை அறிய ஒரு முயற்சி. தொடர் கட்டுரைகள்.
- வாசகர்கள் அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் பதிவுகளையும் வாசிக்கலாம்.
இந்த வலைப்பதிவின் அனைத்து இடுகைகளையும் கண்டறிய உள்ளடக்கம் பார்க்கவும். வலைப்பதிவை தொடர்ந்து வாசிக்க ஓடை/மின்னஞ்சல் சந்தாவில் பதிவு செய்து கொள்ளுங்கள். வலைப்பதிவு பிடித்திருந்தால் பின்தொடருங்கள்.
வலைப்பதிவு தொடங்கியது எப்படி?
இணைய தொடக்க காலகட்டத்தில் யாகூ தான் மிகவும் பிரபலம். அதில் மின்னஞ்சல், செய்திகள், சேட், குரூப்ஸ், டைரக்டரி என பல அம்சங்கள் இருந்தன. அதில் ஜியோசிட்டிஸ் மிகவும் பிரபலம். உங்களுக்கென்று ஓர் இணையத்தளத்தை யாகூ சர்வரில் உருவாக்கி கொள்ளலாம். (வலைப்பதிவு அப்போது பிரபலம் கிடையாது.) நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல நகரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அந்தந்த நகரங்களில் குடியேறி கொள்ளலாம். எனக்காக நான் ஒரு வீட்டை கட்டினேன். கட்டுமான பணியோடு நின்று போயிற்று அது. பிறகு கூகுள் பிளாக்கர் பிரபலமடைந்த சமயம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வலைப்பதிவுகள் தொடங்கி முதல் பதிவோடு அவை நின்று போயிற்று.
சன் நியூஸில் நிஜம் நிகழ்ச்சி தொடங்கிய சமயம், அப்போது என்னோடு பணிபுரிந்த பாலபாரதி தமிழ் பிளாக்கர்ஸ் பற்றி ஒரு தொகுப்பை செய்யலாமே என யோசனை சொன்னார். பிறகு அந்தத் தொகுப்பு ஒளிபரப்பானது. அதே சமயம் நானும் தமிழ்மணத்தைப் பார்த்து உடனே எனக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கும் ஆசை கொண்டேன். ஏற்கெனவே தொடங்கியவை அனைத்தும் முடங்கி போனதால், கவிதைகள் எழுதுவதையாவது தொடர்ந்து செய்வோம் என்று கவிதைகளுக்கு மட்டும் வலைப்பதிவு என்கிற எண்ணத்தில் 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி blogger-இல் செவ்வாய்க்கிழமை கவிதைகள் (http://poetry-tuesday.blogspot.com) என்கிற பெயரில் வலைப்பதிவு தொடங்கினேன்.
- எதற்காக கவிதைகளுக்கான வலைப்பதிவு? – தொடக்கப்புள்ளி
செவ்வாய்க்கிழமையன்று கவிதை பதிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி கொள்ளவே செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்று அப்போது வலைப்பதிவிற்கு பெயர் வைத்திருந்தேன். (இலக்கியவாதிகள் மன்னிப்பார்களாக.) இப்போது வரை என்னுடைய கவிதைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையன்று மட்டுமே பதிக்கப்படுகின்றன.
இரண்டறை வருடங்கள் பிளாக்கரில் குப்பை கொட்டியதற்கு பிறகு sairams.com என்கிற இந்த முகவரிக்கு 2010-ம் ஆண்டு மே 12-ம் தேதியன்று நண்பர் ரவியின் உதவியோடு குடியேறினேன்.
நான்
எனது வலைப்பதிவைப் பற்றி எழுதியவர்கள்
- “வலைப்பூ கவிதைகளில் சாய்ராமின் படைப்புகள் அவற்றின் தீவிர தேடலால் கவனிக்கத்தக்கவை ஆகின்றன, குறிப்பாக மனித இருப்பின் நெருக்கடி பற்றிய கவிதைகள்.” – அபிலாஷ் தாமரை இதழில் எனது வலைப்பதிவை பற்றி எழுதியது. விரிவான கட்டுரை அவரது வலைப்பதிவில் வாசிக்கலாம்.
- என்னுடைய தற்கொலை மேம்பாலம் கவிதைக்காக பாலா அவரது வலைப்பதிவில் வரைந்த கார்ட்டூன்.
- சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள் பற்றி விவசாயி வலைப்பதிவு.
- முத்துக்கமலம் வலைப்பூவில் எழுதப்பட்ட குறிப்பு.
- வலைச்சரத்தில் எனது கவிதையை பற்றி சொன்னதும் & மனிதர்கள் தொடர் பற்றி சொன்னதும் & அப்துல் காதர் கொடுத்த அறிமுகம்.
- ரவி சொன்னது.
- தமிழ்மணம் எனும் பிரபல தமிழ் வலைப்பதிவு திரட்டி 2009-ம் ஆண்டிற்காக நடத்திய சிறந்த இடுகைக்களுக்கான போட்டியில் ‘தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகள்’ என்கிற பிரிவில் என்னுடைய தலித்தை கொளுத்தினார்கள் என்கிற பதிவு இரண்டாவது இடத்தை பெற்றது.
இணையத்தில் வேறிடத்தில் எனது எழுத்துகள்
- பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்! – உயிரோசையில் வெளிவந்த எனது கட்டுரை.
- ஆறாம்திணையில் வெளிவந்த எனது கட்டுரைகள்
நன்றி
- என் மனைவி இளமதி.
- இந்த வலைப்பதிவினைத் தொடங்க உதவிய நண்பர்கள் பாலபாரதி மற்றும் ரவி
- ரவியின் milkhost நிறுவனம் மூலமாக இந்தத் தளம் இயங்குகிறது.
- இந்த பக்கத்தில் தொடக்கத்தில் இடம் பெற்றிருப்பது எனது அபிமான ஓவியரான எட்வர்ட் முன்ச் வரைந்த the scream ஓவியம்.
- வலைப்பதிவு caption ‘இருத்தலின் தாங்கவியலாத எளிமை’: Milan Kundera-வின் The unbearable lightness of being நாவல் தலைப்பின் பாதிப்பால் உருவானது.
- வலைப்பதிவினை தொடர்ந்து வாசித்து எனது நட்பு வட்டத்தில் இணைந்து விட்ட நண்பர்கள்.
thank u for changed the photo
Hi Sai,
Nice to see your creations.
All the Best!
love,
Barani
தங்கள் பதிவினை இன்றுதான் கண்டேன்
வறியவன் பொக்கிஷம் கண்ட மகிழ்ச்சிக் கொண்டேன்
தங்கள் பதிவினைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
வாழ்த்துக்களுடன்…..