Category: வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல

  • நேற்று பதிக்கப்பட்ட இந்த பதிவு ஓர் எதிர்பாரா தொழில்நுட்ப சிக்கலினால் அழிந்து போயிற்று. ஆகவே இதை மீண்டும் பதித்து இருக்கிறேன். RSS (ஓடை சந்தா) மற்றும் மின்னஞ்சல் மூலம் இப்பதிவினைப் படிப்பவர்களுக்கு இது இரண்டாம் முறையாக வந்து சேரும். பொருட்படுத்த வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.

    குடியரசு தலைவர் தேர்தலும் இப்ப நம்ம ஊரு இடை தேர்தல் மாதிரி ஆகிடுச்சு. பொது தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்துல எந்த அரசியல் கட்சி வோட்டு பலத்தோட இருக்குன்னு காட்டுகிற சடங்கா இடை தேர்தலும் அது மாதிரியே குடியரசு தலைவர் தேர்தலும் மாறிடுச்சு. இந்த அபத்தம் இன்னிக்கு இருக்கிற பல பெரிய அபத்தங்களோட ஒரு வெளிப்பாடு.

    குடியரசு தலைவர் அப்படிங்கிறதே ஒரு அலங்கார பதவி தான். ஆனா எழுத்தளவுல இந்தப் பதவிக்குக் கொடுக்கப்படற முக்கியத்துவம் கண்ணைக் கட்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக சொல்லப்படுகிற மக்கள் பிரதிநிதிகள் மன்றம், செயலாக்கம், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றிற்கும் ஜனாதிபதி தான் தலைவர்.… …மேலும் வாசிக்க


  • ஓர் அரசாங்கம் ஒரு போராட்டத்தினை எப்படி அணுக வேண்டும்? சம்பந்தபட்டவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கலாம். அப்படி தான் பல சர்வதிகார அரசுகள் செய்கின்றன. ஆனால் இன்றைய இந்திய அரசு சிவில் உரிமைகளை மதிக்கும் அரசு. அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் செய்ய மாட்டார்கள். முதலில் பேச்சு வார்த்தை, பிறகு சமாதான தூதர்கள், அப்புறம் ஊடக பிரச்சாரம், அதன்பிறகு எதிராளிகள் மேல் அவதூறு பரப்புதல், இறுதி கட்டத்தில் காவல்துறை பூச்சாண்டி என்று படிபடியாக தங்களது அணுகுமுறையை விரித்து கொண்டு போவார்கள். (இந்த அணுகுமுறை கூட இடத்திற்கு இடம் மாறும். காஷ்மீரோ வடகிழக்கு மாநிலங்களோ அல்லது இலங்கைக்கு எதிரான போராட்டங்களாக இருந்தால் அரசு அணுகுமுறை இன்னும் கடினமானதாக மாறி போகும்.)

    ஓர் அரசு தங்களுக்கு எதிரான அல்லது தாங்கள் எடுத்த ஒரு முடிவிற்கு எதிரான ஒரு மாற்றுகருத்தினை எப்படி அணுகுகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் ஜனநாயகம் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என சொல்ல முடியும்.

    …மேலும் வாசிக்க

  • உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நிகராக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு நிகராக பணம் விளையாடுகிறது. அன்பளிப்புகளுக்கும் பஞ்சமில்லை. அதிமுக, திமுக, ஏனைய அரசியல் கட்சிகள் இந்த உள்ளாட்சி தேர்தலை மிக முக்கியமாக பார்ப்பதால் அவர்களின் பிரச்சாரங்கள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

    அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை ஆக்ரமித்து கொள்வதால் வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயித்தபிறகு கட்சிகளுக்கு உண்மையான ஆட்களாக இருப்பார்களே அன்றி தங்கள் பகுதி மக்களுக்கு உண்மையானவர்களாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும். (மேலும் வாசிக்க; உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்)

    அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ… …மேலும் வாசிக்க


  • இந்த முறை உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் போல பரபரப்பாக இருக்கிறது. தெரு தெருவாக பிரச்சாரம் தினமும். கட்சி துண்டுகளை அரசியல் தலைவர் ஸ்டைலில் அணிந்து வேட்பாளர்கள் தங்கள் அடிபொடிகளுடன் வலம் வரும் போது அவர்கள் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்களா அல்லது எம்.எல்.ஏ பதவிக்கா என வியப்பு மேலோங்குகிறது. இத்தனை அடிபொடிகள், தேர்தல் அலுவலகம், வண்ணச் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் செலவு கணக்கு கட்டாயம் பெரிதாக தான் இருக்குமென புரிகிறது.

    எதற்காக இத்தனை செலவு?

    சென்னையில் வார்டு கவுன்சிலர் பதவியே அதிகாரமிக்கது என்கிறார் ஒரு நண்பர். வார்டில் எந்த வேலையாக இருந்தாலும் காண்டிராக்ட் எடுப்பவர் வார்டு கவன்சிலருக்கு 25 சதவீதம் கொடை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கிறார். மற்றவர்களுக்கு கொடை கொடுத்தது போக அதிகபட்சமாக மிச்சமிருப்பது 60 சதவீதம் அல்லது 65 சதவீதம் தான். அதில் என்ன உருப்படியாக வேலை செய்து கொடுத்து விட போகிறார்கள்?… …மேலும் வாசிக்க


  • விக்கிலீக்ஸில் சென்னை தூதரக அதிகாரியின் குறிப்புகள்wikileaks
    அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.

    ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
    கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.

    2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • கருணாநிதி மீண்டும் கோரிக்கை
    நேற்று அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி பற்றி பேச்சை எடுத்து இருக்கிறார். தி.மு.கவின் தொடக்க காலத்தில் மாநில சுயாட்சி முக்கிய கொள்கையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அதை அப்படியே மறந்து விட்டார்கள். எப்போதாவது இது போல கருணாநிதி மட்டும் இதை எங்காவது சொல்லி டெல்லிக்காரர்கள் வயிற்றில் புளியை கரைப்பார். ஆனால் இது வெறும் பூச்சாண்டி விஷயம் என இப்போது எல்லாருக்கும் தெளிவாகி இருக்கும்.

    மாட்டி கொண்ட பிரணாப்
    பாவம், பிரணாப் முகர்ஜியும் மேடையில் மாட்டி கொண்டார். 1970-ம் ஆண்டு தமிழகம் வந்த பிரணாப் எப்படி எல்லாம் அன்று மாநில சுயாட்சிக்காக வாதிட்டார் என்பதை கருணாநிதி நேற்று மேடையில் பேசிய போது பிரணாப் அதை கேட்டு அமைதியாய் இருந்தார் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

    “அன்று நாம் சேர்ந்து போராடினோம். இன்று நீங்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறீர்கள்,” என்று கருணாநிதி பேசியது பிரணாப்பிற்கு ஏண்டா இங்க வந்தோம் என்கிற எண்ணத்தை உண்டு செய்திருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.… …மேலும் வாசிக்க


  • ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

    தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

    இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.

    • 24இல் 2 கள்ள வோட்டு
    • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள்.
    …மேலும் வாசிக்க

  • ஜனநாயகம் என்பது என்ன?

    இன்று நடைமுறையில் இருப்பது உண்மையான ஜனநாயகம் தானா? ஜனநாயகம் என்பது மக்களே தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை என்று சொல்லபடுகிறது. அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன திருத்தம் ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களை ஆண்டு கொள்ளும் முறை என வரையறுக்கபடுகிறது. பிரதிநிதிகள் ஒழங்கானவர்கள் தானா என எப்படி அறிவது? அதற்கு தானே ஐந்து ஆண்டு காலக்கெடு, அவர்கள் ஒழங்காய் இல்லை எனில் அவர்களை தூக்கி எறிந்து விட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாமே என சொல்வார்கள்.

    வெகு சிலரிடம் மட்டும் அதிகாரம் இருப்பதால் என்ன பயன்?

    இன்றைய யதார்த்ததை மேற்சொன்னவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம்.… …மேலும் வாசிக்க