Tag: வாசகர்-டாப்10

  • சுனாமி பீதி – புகைப்படங்கள்

    சுனாமி பீதி – புகைப்படங்கள்

    2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

  • உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண்

    உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண்

    குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள்.

  • உலகப் புகழ் பெற்ற புகைப்படம் – பீரங்கி டாங்கிகளுக்கு எதிரில்

    வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும்…

  • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

    உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

    பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.

  • அவளை முத்தமிடுவது போல என்னையும்

    என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை. இமை மூடுவதும் இல்லை. அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.

  • சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்

    கடவுள் இன்றும் லேட் தான். வந்தவர் மதியத்திற்கு மேல் எங்கு போனார் என்று தெரியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது. மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

  • சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

    சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

    உலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள். “கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.

  • வலைப்பதிவு தொடங்கிய நாளன்றே ஹேக்கிங். மீண்டது எப்படி!

    இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது. ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில் தான்…

  • மனிதர்கள் – லேட்டாய் வந்த காமவுணர்வு

    கணவருக்கு சந்தேகம் ஒரு மின்னல் கீற்றாய் மனதில் தோன்றியது. ஆனாலும் அதனை உடனே மறக்க விரும்பினார். காரணம் இருவருடைய வயது. இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனையா இது? ஆனால் சந்தேக பொறி தீப்பொறியை விட வலிமையானது. படுக்கையில் மனைவி நடந்து கொள்ளும் விதம் புதுவிதமாய் இருந்தது. திருமணமான சமயத்தில் படுக்கையை கண்டாலே மிரண்ட மனைவி பின் எப்போதும் படுக்கையறையில் அதீத ஆர்வத்துடன் இருந்தது இல்லை. இப்போது திடீரென சில நாட்களாய் ஏன் வெறி பிடித்தவள் போல் ஆகிறாள்.

  • பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை

    பேய் வீடு – பாலபாரதியின் கதைக்கு என் மறுமொழி கதை

    கடற்கரையில் கதை பேசி அமர்ந்திருந்த சில இளைஞர்கள் அந்த அழகிய இளம் மனைவி உடலெல்லாம் தீ பற்றி எரிய கடலை நோக்கி ஓடுவதை பார்த்தார்கள்.