மூட்டை மூட்டையாய் வார்த்தைகள்

மர நிழல் போர்த்திய சாலையில்
தினமும்
மூட்டை மூட்டையாய் வார்த்தைகளை நிரப்பி
தனியாளாய் இழுத்து வருகிறேன்.
பூட்டப்பட்ட கதவு திறந்ததே இல்லை.
உன் வீட்டருகே
மலை போல வளர்ந்து விட்டன
நான் தினமும் விட்டுச் செல்லும் 
மூட்டைகள்.