பள்ளிக்கூட மணி

பள்ளிக்கூட மணி

இலைகளின் சலசலப்பு போல
சில பேச்சரவம்.
மற்றப்படி
நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
பேரமைதி.

எங்கோ உருப்பெற்று வழிந்தோடி
கரைந்து போகிறது
எதோவொரு வாகனத்தின் ஒலி.

ஜன்னலுக்கு வெளியே
நிரம்பி கொண்டிருக்கிறது
மஞ்சள் வெயில்.

விட்டெறிந்த கல்லாய்
எல்லாவற்றையும் கலைத்து அழுகிறது
பள்ளிக்கூட மணி.

காலடிச்சப்தங்களுக்காக
துழாவுகிறது
செவிப் புலன்.

உருக தொடங்கி
வளைகிறது பெஞ்ச்.

நன்றி
ஓவியம்: பில்லி அலெக்சாண்டர்