ஊர் காவல்தெய்வம்

ஊர் காவல்தெய்வம்

இந்த ஊரின் காவல் தெய்வமே!

இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே!

அந்தக் தவறைச் செய்தது நானே!

அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!

குளிர்ந்த ஏரிநீரில் மூச்சடக்கி மூழ்கி

உன் பார்வையில் இருந்து தப்பஎண்ணினேன்!

பாய்ந்த ஒரு வெண்ணொளி நீரைக்

கிழித்து ஏரியைப் பற்றி எரித்தது!