கண்ணீரும் அழுகையும் தேவைப்படும் போது வாய்ப்பதில்லை
நான் அழ வேண்டிய தருணங்களில்
அழுவதில்லை.
சாவு வீடுகளில் கூட.
என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக
சட்டென அழுகை வருகிறது.
அழாத போது குற்றவுணர்வும்
அழுது முடிக்கும் போது சலிப்பும்
சிலுவையைச் சுமக்க வைக்கின்றன
எப்போதும்.