வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவன் அந்த டாங்கியைப் பார்த்து எதோ சொல்கிறான் என புரிந்து கொள்ள முடிகிறது. அவனது செயலைக் கண்டு பீரங்கி டாங்கி குழம்பி போய் சற்று நேரம் நின்று பிறகு மீண்டும் அவனைத் தவிர்த்து சற்று திரும்பி தன் வழியில் செல்ல எத்தனிக்கிறது. ஆனால் அந்த இளைஞனோ மீண்டும் மீண்டும் அந்த மிருகத்திற்கு முன்னால் போய் நிற்கிறான்.… …மேலும் வாசிக்க
Year: 2012
-
-
கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?
ஓர் அரசாங்கம் ஒரு போராட்டத்தினை எப்படி அணுக வேண்டும்? சம்பந்தபட்டவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கலாம். அப்படி தான் பல சர்வதிகார அரசுகள் செய்கின்றன. ஆனால் இன்றைய இந்திய அரசு சிவில் உரிமைகளை மதிக்கும் அரசு. அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் செய்ய மாட்டார்கள். முதலில் பேச்சு வார்த்தை, பிறகு சமாதான தூதர்கள், அப்புறம் ஊடக பிரச்சாரம், அதன்பிறகு எதிராளிகள் மேல் அவதூறு பரப்புதல், இறுதி கட்டத்தில் காவல்துறை பூச்சாண்டி என்று படிபடியாக தங்களது அணுகுமுறையை விரித்து கொண்டு போவார்கள். (இந்த அணுகுமுறை கூட இடத்திற்கு இடம் மாறும். காஷ்மீரோ வடகிழக்கு மாநிலங்களோ அல்லது இலங்கைக்கு எதிரான போராட்டங்களாக இருந்தால் அரசு அணுகுமுறை இன்னும் கடினமானதாக மாறி போகும்.)
… …மேலும் வாசிக்கஓர் அரசு தங்களுக்கு எதிரான அல்லது தாங்கள் எடுத்த ஒரு முடிவிற்கு எதிரான ஒரு மாற்றுகருத்தினை எப்படி அணுகுகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் ஜனநாயகம் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என சொல்ல முடியும்.
-
முதுமை
வருடங்கள் உருண்டோடி
தனிமையிலே முதியவர்கள் ஆனோம்.
முகத்தில் சுருக்கங்களுடன்
எத்தனையோ எத்தனை வருத்தங்கள்.
அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
எங்கள் இளமையை மீட்பதற்காக
அந்த வருகை.
மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.
அதுவரை சலனமற்ற நீர்பரப்பில் பிரதிபலிப்போம்
எங்கள் வருத்தங்களை.
-
பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்
இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு தடை விதித்தது. வெறும் customs act-இல் தடை செய்யபட்டது மட்டுமே இந்த புத்தகம். இப்போது சல்மான் ருஷ்டி ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வருவது யாருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை, வழக்கமாய் அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை காட்டியே இந்த முறை அவரை வரவிடாமல் செய்து விட்டார்கள்.… …மேலும் வாசிக்க
-
யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை
முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம்.நினைக்கும் போதெல்லாம்
உடலினுள் பரவுகின்றன
உணர்வலைகள்.
முகங்கள்
ஏனோ நினைவில் இல்லை.
வலை வீசி தேடினால்
சிக்குவது
உருக்குலைந்து போன ஓவியங்களே.என் முகமும்
மறந்து போயிருக்குமென நினைக்கையில்
துளிர்க்கிறது
பெருமூச்சோடு
சிலசமயம் மகிழ்ச்சி.
-
கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்
கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.நிகழ் காலத்தில் ரயில்.
கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல
வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.உருவாகிறது
சோகத்தின் பெருமழை.
-

உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்
அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.அது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து கொண்டிருந்த காலம். ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் இருந்தும் வறுமையில் இருந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்படி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தவர்களுக்கான அகதிகள் முகாம் இது. நசீர் பாக் முகாம் என்று அந்த இடத்திற்கு பெயர். நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக ஸ்டீவ் அங்கு வந்திருக்கிறார்.
அகதிகள் முகாமில் ஒரு டெண்டிற்குள் ஒரு தற்காலிக வகுப்பறையை உருவாக்கி இருந்தார்கள்.… …மேலும் வாசிக்க


