இன்று மதியம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஓர் இளைஞர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசரம் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தேன்.
“பில்டிங்கே ஆடுது,” என்று அந்த இளைஞர் மொத்தமாய் தெருவைப் பார்த்து சொன்னபோது அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்று மனதில் தோன்றியது. ஆனால் அதே சமயம் பல கட்டிடங்களில் இருந்து பலர் வெளியே அவசர அவசரமாய் வருவதைப் பார்த்தவுடன் சின்ன அளவிலான நிலநடுக்கம் வந்திருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் சென்னையே பரபரப்பானது.
இந்தோனிசியாவில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்திய கிழக்கு கடற்கரை முழுவதும் சின்ன அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், சுனாமி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்தன.
மெரீனா கடற்கரைக்கு போன போது அங்கு காவல்துறையினர் கடற்கரை மணலில் இருந்தவர்களையெல்லாம் அவசர அவசரமாய் வெளியேற்றி கொண்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்தும் பள்ளிகளிலும் இருந்தும் மக்கள்கூட்டம் வேக வேகமாய் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தனர்.… …மேலும் வாசிக்க








