கை மீது மட்டும் பெய்யும் மழை

அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.

கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.

கண்களை மூடும் போது
இடி இடிக்கும் சப்தம்
இமைகளுக்குள்ளாக.

கரைகிறேன்.