கிழவி சாக போகிறாள்

தலையில் பலத்த காயம்!
இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!
மற்றவர்கள் எல்லாம் எட்டி பார்த்து விட்டு சாலையில் விரைந்து மறைகிறார்கள்!
அவளுக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள்; இன்றைய பொழுதை வீணாக்காதே என்கிறது என் மனம்.
போவதா வேண்டாமா என கால்கள் தடுமாறுகின்றன.
வெள்ளை சட்டைகள் போர்த்திய சாலையையும்
சிகப்பு உதிரம் பரவும் நடைப்பாதையையும்
மாறி மாறி பார்க்கிறேன் நான்.
இதை கவிதையாக எழுதலாம் என்னும் போது புன்னகை ததும்புகிறது என்னுள்.
அதற்கு பிறகு கிழவி என்னவானாள் என்பது எனக்கு தெரியாது.