காதலின் துயரம் அழுகையல்ல அது கோபம்

மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை
வண்ணம் தீட்டும் மேகங்களிடம் பதுக்கி வைத்தாலும்
கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும்
வாங்கியும்
படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன்.

வேண்டாம்.

காதலின் துயரம்
என் வாழ்வை போர்த்தி இருக்கிறது.
அது என் வாழ்க்கை.
அது இல்லாமல் என் வாழ்வில்லை.

காதலின் துயரம் கோபம்.
ஒவ்வொர் இரவும்
கோபம் மட்டுமே.