கறை படிந்த சட்டை

எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை
மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல
கறை படிந்து தான் போகிறது
எனது சட்டையில்.

நண்பன் இறந்து போன நாளில்
அவனுடைய சடலத்தை தூக்க தயங்கிய கணத்தில்
கறையின் நிறம் மாறி போனது.