வார்த்தைகளை திருடிச் சென்றவன்

சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்

இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்

அதனை திறந்து பார்ப்பான்.

 

எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.

திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என

என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.

மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.