ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி

கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

இந்த முறை காரணம் ஒரு கிழவி.
பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

பைத்தியமா அவள்?

சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
வசையொலி கூடியபடி இருக்கிறது.
அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
முனைப்பில் இருக்கிறாள் கிழவி.


Comments
6 responses to “ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி”
  1. உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) Avatar
    உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் – ulavu.com)

    புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

  2. D.R.Ashok Avatar

    நன்று. செதுக்கி இருக்கலாமோ?

  3. D.R.Ashok, ஆமாம் உண்மை தான். அவசரம் கூடாது தான்.

  4. மதி Avatar
    மதி

    அருமையான கவிதை .. உங்கள் வலைப்பதிவில் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளையும் வாசித்தேன்.. மிகவும் ரசித்தேன்.. இந்தக் கவிதை நிச்சயம் மனதை ஏதோ செய்கிறது … அவசரமும் பொறுமையும் வாழ்வின் நிலையை ஒட்டிப் பல அர்த்தங்களில் புலனாக வைக்கும் கவிதை !

  5. உங்கள் வலைப்பதிவில் இருந்து இங்கு வந்து பார்த்தால் நீங்கள் இங்கு வந்து போனது தெரிகிறது. மதி, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

  6. அன்பின் சாய்ராம் – பாவம் அந்தக் கிழவி -என்ன செய்ய இயலும் – அவளது செயல்களை முடித்த பின்னர்தான் விலக் இயலும் – நல்லதொரு கவிதை – இரசித்தேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.