தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
வீட்டிற்குள் வந்ததும்
அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.
முகமூடியை கழற்றியும்
முகத்தில் தெரியவில்லை முகம்.
சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!
நல்லதொரு அழுத்தமான கரு உள்ளே!>>முகமூடியை கழட்டியும் >>முகமூடியை கழற்றியும்… என்று வரலாம்…>>பேச்சுவழக்கிலேயே உள்ளது.. “கழட்டி”>>வாழ்த்துக்கள் நண்பரே!
அதென்னங்க செவ்வாய்க்கிழமை கவிதைகள்?>>🙂
உங்கள் கருத்திற்கும் எனது வலைப்பதிவினை பின்தொடர்வதற்கும் நன்றி ஷீ-நிசி. நீங்கள் சொன்னபடி எனது கவிதையில் இருந்த ‘கழட்ட’ என்கிற வார்த்தையை ‘கழற்ற’ என மாற்றியிருக்கிறேன். >>>:)செவ்வாய்க்கிழமை கவிதை என்கிற தலைப்பிற்கான காரணம் – http://poetry-tuesday.blogspot.com/2008/01/blog-post.html