மழை கட்டிய சுவர்

வானத்தில் வெளிச்சத்தை ஊற்றியது மின்னல்.

உனது ஜன்னல் கண்ணாடியில் மின்னி மறைந்தது உன் நிழல் உருவம்.

எனக்கு மேலிருந்த தடுப்பு, பெருமழைக்கு இனியும் தாங்காது.

உடலெங்கும் ஈரம்.

அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.

நம் இருவருக்குமிடையே

மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.