நிறைந்த பேச்சு

மிகவும் சாதாரண உரையாடல் தாம்.

பரஸ்பர நலம் விசாரிப்பு.

பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.

பல மணி நேரம் கழித்து

திருமண மண்டபத்தை காலி செய்து

நாற்காலிகளை அடுக்கி கொண்டிருக்கிறார்கள்.

மண்டபமெங்கும் நிறைந்திருக்கின்றன

அவள் கண்களால் உரையாடியவற்றின்

விளக்கவுரைகள்.