அறிமுகம்

இந்த வலைப்பதிவு & நான்

சாய் ராம் என்னுடைய பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகள். தவிர ஜெயா டிவி, சன் நியூஸ் நிகழ்ச்சிகளுக்காக பணிபுரிந்ததும் உண்டு. விஜய் டிவியில் ‘நடந்தது என்ன’ ‘என் தேசம் என் மக்கள்’ போன்ற  நிகழ்ச்சிகளின் இயக்குநர்.

கவிதைகள், கதைகள் என்று படைப்புலகில் ஆர்வமுண்டு. நடப்பினைக் கண்டு கருத்துகள் சொல்வதுண்டு. இதற்கான தளமே இந்த வலைப்பதிவு.

இந்த வலைப்பதிவில் என்ன வாசிக்கலாம்?

இந்த வலைப்பதிவின் அனைத்து இடுகைகளையும் கண்டறிய உள்ளடக்கம் பார்க்கவும். வலைப்பதிவை தொடர்ந்து வாசிக்க ஓடை/மின்னஞ்சல் சந்தாவில் பதிவு செய்து கொள்ளுங்கள். வலைப்பதிவு பிடித்திருந்தால் பின்தொடருங்கள்.

வலைப்பதிவு தொடங்கியது எப்படி?

இணைய தொடக்க காலகட்டத்தில் யாகூ தான் மிகவும் பிரபலம். அதில் மின்னஞ்சல், செய்திகள், சேட், குரூப்ஸ், டைரக்டரி என பல அம்சங்கள் இருந்தன. அதில் ஜியோசிட்டிஸ் மிகவும் பிரபலம். உங்களுக்கென்று ஓர் இணையத்தளத்தை யாகூ சர்வரில் உருவாக்கி கொள்ளலாம். (வலைப்பதிவு அப்போது பிரபலம் கிடையாது.) நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல நகரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அந்தந்த நகரங்களில் குடியேறி கொள்ளலாம். எனக்காக நான் ஒரு வீட்டை கட்டினேன். கட்டுமான பணியோடு நின்று போயிற்று அது. பிறகு கூகுள் பிளாக்கர் பிரபலமடைந்த சமயம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வலைப்பதிவுகள் தொடங்கி முதல் பதிவோடு அவை நின்று போயிற்று.

சன் நியூஸில் நிஜம் நிகழ்ச்சி தொடங்கிய சமயம், அப்போது என்னோடு பணிபுரிந்த பாலபாரதி தமிழ் பிளாக்கர்ஸ் பற்றி ஒரு தொகுப்பை செய்யலாமே என யோசனை சொன்னார். பிறகு அந்தத் தொகுப்பு ஒளிபரப்பானது. அதே சமயம் நானும் தமிழ்மணத்தைப் பார்த்து உடனே எனக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கும் ஆசை கொண்டேன். ஏற்கெனவே தொடங்கியவை அனைத்தும் முடங்கி போனதால், கவிதைகள் எழுதுவதையாவது தொடர்ந்து செய்வோம் என்று கவிதைகளுக்கு மட்டும் வலைப்பதிவு என்கிற எண்ணத்தில் 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி blogger-இல் செவ்வாய்க்கிழமை கவிதைகள் (http://poetry-tuesday.blogspot.com) என்கிற பெயரில் வலைப்பதிவு தொடங்கினேன்.

செவ்வாய்க்கிழமையன்று கவிதை பதிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி கொள்ளவே செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்று அப்போது வலைப்பதிவிற்கு பெயர் வைத்திருந்தேன். (இலக்கியவாதிகள் மன்னிப்பார்களாக.) இப்போது வரை என்னுடைய கவிதைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையன்று மட்டுமே பதிக்கப்படுகின்றன.

இரண்டறை வருடங்கள் பிளாக்கரில் குப்பை கொட்டியதற்கு பிறகு sairams.com என்கிற இந்த முகவரிக்கு 2010-ம் ஆண்டு மே 12-ம் தேதியன்று நண்பர் ரவியின் உதவியோடு குடியேறினேன்.

நான்

எனது வலைப்பதிவைப் பற்றி எழுதியவர்கள்

இணையத்தில் வேறிடத்தில் எனது எழுத்துகள்

நன்றி

 • என் மனைவி இளமதி.
 • இந்த வலைப்பதிவினைத் தொடங்க உதவிய நண்பர்கள் பாலபாரதி மற்றும் ரவி
 • ரவியின் milkhost நிறுவனம் மூலமாக இந்தத் தளம் இயங்குகிறது.
 • இந்த பக்கத்தில் தொடக்கத்தில் இடம் பெற்றிருப்பது எனது அபிமான ஓவியரான எட்வர்ட் முன்ச் வரைந்த the scream ஓவியம்.
 • வலைப்பதிவு caption ‘இருத்தலின் தாங்கவியலாத எளிமை’: Milan Kundera-வின் The unbearable lightness of being நாவல் தலைப்பின் பாதிப்பால் உருவானது.
 • வலைப்பதிவினை தொடர்ந்து வாசித்து எனது நட்பு வட்டத்தில் இணைந்து விட்ட நண்பர்கள்.

3 Responses

 1. jeyaprakash
  jeyaprakash at · Reply

  thank u for changed the photo

 2. N J Barani
  N J Barani at · Reply

  Hi Sai,

  Nice to see your creations.

  All the Best!

  love,
  Barani

 3. ramani
  ramani at · Reply

  தங்கள் பதிவினை இன்றுதான் கண்டேன்
  வறியவன் பொக்கிஷம் கண்ட மகிழ்ச்சிக் கொண்டேன்
  தங்கள் பதிவினைத் தொடர்வதில்
  பெருமிதம் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்…..

Leave a Reply