கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்

கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.

நிகழ் காலத்தில் ரயில்.
கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல
வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.

உருவாகிறது
சோகத்தின் பெருமழை.