Category: கவிதைகள்

  • காகிதத்தை மை தொடும் கணம்

    சருகுகள் கூட விட்டு போன நிலப்பரப்பில் பட்டு போன மரம் போல அதன் காய்ந்த பட்டை போல அவன் கிடக்கிறான். கேள்விகுறி போல கிடக்கிறது அவன் உடல். முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

  • சுயத்தை மறத்தல்

    நான்கைந்து நாட்களாக ஒரே உடை. கலைந்த தலைமுடி. தாடி. இமைக்காதது போல அலைபாயும் கண்கள். சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.

  • இருளினை தின்னும் வெளிச்சம்

    வானத்தை போர்த்தி இருக்கிறது இருள். நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம். பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள். முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

  • பழிக்கு பழி!

    என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது. நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது. அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.

  • எந்திரத்தினுள் அவர்கள்

    இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும். நேரம் கடந்து விட்டது. காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும் நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது.

  • அவன் கைதான மறுநாள்

    சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன். தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கறை படிந்த சட்டை

    எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல

  • அடிமைச்சுகம்

    அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம். வேலைகளை ஏவலாம். கோபத்தைக் கொட்டலாம். அடிக்க கூட செய்யலாம்.

  • தொடர் கொலையாளி

    மோகம் வென்று கழுத்தை அறுத்து இரத்தம் குடித்து உதிரப் படுக்கையில் தூங்கும் போது வருவதெல்லாம் துர்கனவுகள்.

  • வார்த்தைகளை திருடிச் சென்றவன்

    சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன் இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள் அதனை திறந்து பார்ப்பான்.