Category: கட்டுரைகள்

  • வெற்றியின் களிப்பு ஒரு போதை. தன்னை தானே மறக்க வைத்து, அதிகமான தேனை அருந்திய வண்டாக, மயக்கமாய் சுற்றி வர செய்கிற விஷயம்.

    1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள். அமெரிக்க அதிபர் ட்ரூமென், ஜப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததை அடுத்து அன்று காலை ஏழு மணிக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலக போர் முடிவிற்கு வந்ததை அறிவித்தார். போர் வெற்றி அமெரிக்கா நாடெங்கும் கொண்டாடபட்டது. நாடு ஜெயித்து விட்டதே என்கிற எண்ணம் ஒரு புறம். இனி இந்த போர் முடிவிற்கே வராதா என்று கடந்த ஏழு வருடங்களாய் உலகை உலுக்கி கொண்டிருந்த அசுர நிகழ்வு முடிந்து விட்ட மகிழ்ச்சி. படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என எல்லாரும் அளவுகடந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

    அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூ யார்க் நகரத்திலும் வெற்றி எல்லா இடங்களிலும் கொண்டாடபட்டு கொண்டிருந்தது. இராணுவ வீரர்கள் அளவிற்கு அதிகமாக மதுவை குடித்து விட்டு நகரமெங்கும் சுற்றி கொண்டிருந்தார்கள். ஆல்பிரட் எய்ஸ்டென்ட் என்கிற புகைப்படக்காரர் வீதிகளில் மிதக்கும் புகழ் போதையையும் அதன் விளைவாய் மக்கள் என்றுமில்லாமல் வித்தியாசமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருப்பதையும் புகைப்படமாக எடுத்தபடி இருந்தார்.… …மேலும் வாசிக்க


  • இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.

    உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.

    சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். முக்கியமாக சிபிஎம் கட்சியினர். உத்தபுரம் கிராமம் விஷயத்தில் கூட பிரகாஷ் கரத் தொடங்கி பலர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது கட்டாயம் பாராட்டபட வேண்டிய விஷயம். என்றாலும்…

    கம்யூனிச கட்சிகளில் சாதி பாகுபாடு பல ஆண்டுகளாக இருக்கிறது என பல சமயங்களில் பல தலித் நல ஆர்வலர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள். காலம் காலமாக உயர்சாதியினர் மட்டுமே கட்சியின் உயர் பொறுப்புகளை பிடித்து இருந்தார்கள் என சொல்லபடும் குற்றசாட்டை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அப்படி இருக்க இன்று கட்சி நலிவுறும் சமயத்தில் தனது பிடியை இறுக்கி கொள்ள இந்த வகை நடவடிக்கைகளில் காம்ரேடுகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை.… …மேலும் வாசிக்க


  • ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர்.

    நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

    தனக்கு நேர்ந்தது போல பல தமிழர்களுக்கு இந்த பலவந்தமான வழியனுப்பு விழா நடந்திருக்கிறது என நடராஜா குற்றம் சாட்டுகிறார். இந்த வருடம் ஜூலை மாதம் மட்டும் பனிரெண்டு தமிழர்கள் இப்படி நாடு கடத்தபட்டதாக மேற்கு லண்டனில் உள்ள தமிழ் அமைப்பை சார்ந்த நகுலேந்திரன் என்பவர் பிபிசியில் குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்.

    இலங்கையில் நடைபெறும் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலே இப்படியான ரகசிய வேலைகள் இலங்கை அரசின் பழி வாங்குதலுக்கு சாதகமாக நடக்கிறது என்றால் இலங்கையின்  நேச நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டியதில்லை.… …மேலும் வாசிக்க


  • நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம்.

    இந்தியாவின் நிலை இன்னும் மோசம்
    உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

    இந்தியா

    • 15 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
    • இந்தியாவில் ஏற்படும் 50% குழந்தைகளின் மரணம் சத்துணவு பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
    …மேலும் வாசிக்க

  •  

    கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

    வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

    அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை.

    …மேலும் வாசிக்க

  • ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

    தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

    இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.

    • 24இல் 2 கள்ள வோட்டு
    • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள்.
    …மேலும் வாசிக்க

  • டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன்.

    ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?

    ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு முக்கிய விஷயம், தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சீதோஷ்ண மாற்றம், வறுமை, சுகாதார பிரச்சனைகள், இனவொழிப்பு செயற்பாடுகள் ஆகியவற்றிலும் கவனம் கொள்வேன் என்பதே. ஜிம்பாம்பேயில் இருந்து ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும், டார்பூர் இனவொழிப்பு செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தபட வேண்டும் என அச்சமயம் ஓபாமா உரக்க சத்தமிட்டார். “உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் இனவொழிப்பு வேலைகள் நடந்தால், இனத்தின் பெயரால் மக்கள் மிருகத்தனமாய் வேட்டையாடப்படும் போது நாம் அமைதி காத்தால் அது நம்மை மதிப்பு இழந்தவர்களாய் மாற்றி விடும்,” என்று ஓபாமா தன் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார்.… …மேலும் வாசிக்க


  • விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.

    தேசியத்தின் எழுச்சி

    பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும் ஆதரவும் இருந்தன.

    ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முன்னோடிகளை வளர்த்தது அமெரிக்கா தாம். சோவியத் யூனியனுக்கு எதிராக தாலிபானின் முன்னோடிகள் உருவானார்கள். இன்று சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கலகக்காரர்களை வளர்த்து விடுவதும், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் கலகக்காரர்களை ஆதரிப்பதும் இதன் நீட்சிகளே. இந்த போக்கு இன்னும் தொடர்கிறது என்றாலும் இன்று அதனை வெளிபடையாக செய்ய இயலாத நிலை தோன்றியிருக்கிறது. காரணம் பனிப்போர் ஓய்ந்த பிறகு ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • ஜனநாயகம் என்பது என்ன?

    இன்று நடைமுறையில் இருப்பது உண்மையான ஜனநாயகம் தானா? ஜனநாயகம் என்பது மக்களே தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை என்று சொல்லபடுகிறது. அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன திருத்தம் ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களை ஆண்டு கொள்ளும் முறை என வரையறுக்கபடுகிறது. பிரதிநிதிகள் ஒழங்கானவர்கள் தானா என எப்படி அறிவது? அதற்கு தானே ஐந்து ஆண்டு காலக்கெடு, அவர்கள் ஒழங்காய் இல்லை எனில் அவர்களை தூக்கி எறிந்து விட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாமே என சொல்வார்கள்.

    வெகு சிலரிடம் மட்டும் அதிகாரம் இருப்பதால் என்ன பயன்?

    இன்றைய யதார்த்ததை மேற்சொன்னவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம்.… …மேலும் வாசிக்க


  • வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.

    இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக கூட ஒரே விதமான நிலைபாடுடன் தான் இயங்குகின்றன. அதாவது சந்தர்ப்பவாதம். அப்படியானால் மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் உணர்வுகளை எப்படி பதிவு செய்வார்கள்.

    என்னை பொறுத்த வரை ஈழப்பிரச்சனை எந்தளவு தாக்கத்தை தமிழக தேர்தலில் ஏற்படுத்தும் என்பதை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடையும் வெற்றி/தோல்வி/படுதோல்வி இவற்றை கொண்டே அளவிட முடியும்.

    ஈழப்பிரச்சனையில் தங்கள் நிலைபாடு இந்த தேர்தலில் தங்களுக்கு பலவீனமாக மாறும் என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து இருக்கிறது.… …மேலும் வாசிக்க