Category: கட்டுரைகள்

  • “…நமது அரசியலைப்பு உருவாகி அறுபது வருடங்களாகி விட்டன. தீண்டாமை இன்னும் அழிந்தபாடில்லை…” – நீதிபதி பி.கே.மிஸ்ரா & நீதிபதி ஜெயசந்திரன், உயர்நீதிமன்றம்.

    மேற்சொன்ன வார்த்தைகள் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகளால் சொல்லபட்டவை. என்ன வழக்கு அது?

    திருச்சி அருகே மணப்பாறை தாலுக்காவில் உள்ள சம்பட்டி பஞ்சாய்த்து இடுகாட்டில் தலித் உடலை புதைக்க அனுமதி மறுத்தனர் சாதி இந்துக்கள். இது நடந்தது டிசம்பர் 2008இல். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லா உயர் அதிகாரிகளும் அங்கு வந்து சமரசம் பேசினர். சாதி இந்துக்கள் தலித் உடலை இடுகாட்டில் அனுமதிக்க தயாராக இல்லை. காலம் காலமாக அரசு உயரதிகாரிகள் எடுக்கும் அதே முடிவை தான் இந்த உயரதிகாரிகளும் எடுத்தார்கள். சர்ச்சை உருவானால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் எதற்கு வம்பு என்று தலித் உடலை வேறு இடத்தில் புதைத்து கொள்ள சொல்லி விட்டார்கள்.

    தற்போது இந்த விஷயத்தை பற்றி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.… …மேலும் வாசிக்க


  • ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

    தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

    வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

    இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான்.… …மேலும் வாசிக்க


  • எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.

    தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது “தமிழினி மெல்ல சாகும்,” என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.

    ஓவியம்: Frank Frazetta


  • நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.

    அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல

    அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல.… …மேலும் வாசிக்க


  • இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி?

    இன்று முழுவதும் நான் சந்தித்த மனிதர்கள் பல பேர் இந்த காட்சியினை கண்டு சந்தோஷபட்டதை பார்த்தேன். யாரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கிடையாது. உலகிலே மிகுந்த அதிகாரமுள்ள ஒருவர் மீது ஷு எறியும் துணிவுள்ளவரை பற்றிய வியப்பும் அல்ல இது. பலருடைய மனதில் இருக்கும் பெருங்கதையாடல் குறித்த கோபம் தான் இப்படி வெளிபடுவதாய் நினைக்கிறேன். அல்லது அதிகாரத்தின் மீதான சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபத்தின் வெளிபாடு தான் இந்த காட்சி குறித்தான மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.

    முன்டேசர் அல் சய்தி! ஈராக்கில் உள்ள அல் பாக்தாத்தியா என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்து வருபவர்.… …மேலும் வாசிக்க


  • 1. பிரச்சாரத்தின் பிம்பம்
    புகைப்படக்காரர் – கிரிஸ்டோபர் மோரிஸ்

    அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மெக் கைன் தான் நிகழ்த்த இருக்கும் உரைக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது அவரது மனைவி சிண்டி, ஓட்டல் அறையில் வெள்ளை வைனை அருந்தியவாறு கணவருக்காக காத்திருந்தார்.

    பெல்ப்ஸ் சாதனை
    புகைப்படக்காரர் – ஹன்ஸ் லுடைமியர்

    இந்த ஆண்டு சீனாவில் நடத்தப்பட்ட ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் போட்டி வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் உலக சாதனையாக அதிகளவு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரது ஏழாவது தங்கப்பதக்கம் நூறு மீட்டர் பட்டர்ஃபளை நீச்சலில் கிடைத்தது. இதில் அவருக்கு அடுத்ததாக வந்த செர்பிய நாட்டு நீச்சல் வீரர் மிலோரட் கேவிக்கிற்கும் அவருக்கும் இருந்த வித்தியாசம் வெறும் .01 விநாடிகள் தாம்.… …மேலும் வாசிக்க


  • உலகளவில் பிரபலமான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW – Human Rights watch.) சர்வதேச அளவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தைரியமாய் பகிரங்கபடுத்துவதில் இந்த தன்னார்வ நிறுவனம் பெயர் பெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண அரசாங்கத்தை குற்றம் சாட்டி, அங்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிவித்து இருக்கிறது.

    இலங்கையின் கிழக்கு மாகாணம் தற்போது ராஜ பக்சே அரசின் கட்டுபாட்டில் உள்ளது. விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்குரிய போர்படை தளபதியாக இருந்த கருணா அம்மன் 2004 ஆம் ஆண்டு விடுதலைபுலிகளிடமிருந்து பிரிந்து இலங்கை அரசிற்கு துணை போனார். தற்போது அவரது தலைமையின் கீழ் செயல்படும் ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ என்கிற அமைப்பு கிழக்கு மாகாணத்தின் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. கடந்த மே மாதம் முதல் இந்த அமைப்பை சேர்ந்த பிள்ளையன் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவர் இங்கு முதலமைச்சராக பதவி வகிக்கிறார்.… …மேலும் வாசிக்க


  • இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் இன்று நேற்றல்ல அது அரை நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் ஒரு கொடூரம். இலங்கை அரசாங்கமே தலைமை தாங்கி நடத்தும் இந்த கொடூரத்திற்கு லட்சக்கணக்கில் தமிழர்கள் மடிந்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் இந்த தமிழின ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் பல காலமாக தெரிவித்து வருகிறார்கள். இந்த தமிழ் ஆதரவு போக்கில் ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. விடுதலைபுலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யபட்ட அமைப்பாக அறிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைபுலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, ஈழத்து தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் பற்றி கண்டன குரல்கள் எழுப்புபவர்கள் கூட ஓரம் கட்டப்பட்டார்கள். இதற்கு காரணங்கள் இரண்டு.

    காரணம் ஒன்று

    இந்திய அரசாங்கத்திற்கு எப்போதுமே தமிழக பிரிவினையாளர்கள் மீது ஓர் எச்சரிக்கை உணர்வு உண்டு. பஞ்சாப் போலவோ காஷ்மீர் போலவோ தமிழகமும் தனி நாடு கோரிக்கை எழுப்பும் அபாயம் உண்டு என்பதால் உளவுத்துறை, பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு பிஞ்சிலே களையும் முறையை கையாண்டு வந்தார்கள்.

    …மேலும் வாசிக்க

  • 369 வருடங்களுக்கு முன்பு 1639-ம் ஆண்டு மதராஸ்பட்டினம் என்கிற இடத்தில் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான உரிமையும் நிலமும் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கபட்டது. இந்த சம்பவமே இன்றைய சென்னை நகரம் உருவாக காரணமாக அமைந்தது என சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளான இன்று (22 ஆகஸ்ட்) மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒப்பந்தத்தில் மெட்ராஸ்பட்டினம் என்று இருந்தாலும், இன்றைக்கு மெட்ராஸ் மாநகரத்தை நாம் சென்னை என அரசு வழிகாட்டுதல்படி அழைக்கிறோம். அப்படியானால் இன்றைய தினம் மெட்ராஸ் தினம் என்று அழைக்கபட வேண்டுமா? சென்னை தினம் என்று அழைக்கபட வேண்டுமா? 369 வயதாகும் சென்னை அதற்கு முன்னரே பல்லவர் காலத்தில் துறைமுகமாக புகழ் பெற்றிருந்தது. மைலாப்பூர், திருவல்லிகேணி ஆகிய பகுதிகள் குமாஸ்தாக்களின் வருகைக்கு முன்னரே ஊர்களாக வளர்ந்திருந்தன. என்றாலும் ஆங்கிலேயரே இன்றைய சென்னைக்கு தொடக்கம் கொடுத்தார்கள் என நாம் நினைப்பது நியாயமா? சரி அப்படியே கருதி விழா எடுத்தாலும் போர்ச்சீகிய பெயரான மெட்ராஸ் பொருந்துமா?

    …மேலும் வாசிக்க

  • தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர் ஒருவர் அதனை பத்திரிக்கைகளில் பதிக்கும் ஆர்வமில்லாமல் இருந்தார். அவர் இப்போது தனது கவிதைகளை அரங்கேற்றுவதற்கு வலைப்பதிவினை சிறந்த இடமாக இனம் கண்டு கொண்டிருக்கிறார். இப்படி பற்பல விஷயங்கள் பார்க்கிறோம்.

    • வலைப்பதிவு என்றாலே journal மாதிரி தினசரி தனது கருத்துகளை நான்கு பாராக்களில் முடக்கி எழுத வேண்டும் என்கிற கருத்து சரியா? தவறா? அப்படி எழுதுபவர்கள் தான் வலைப்பதிவர் என்கிற சரியான இலக்கணத்திற்குள் வருவார்களா?
    • வலைப்பதிவில் எழுதுபவை அன்றைக்கு படிக்க உகந்ததாக அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தால் அப்போது படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பதிவுகள் யாருக்கும் சுவாரஸ்யம் தராமல் அல்லவா போகும்.
    …மேலும் வாசிக்க