யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை

முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம்.

நினைக்கும் போதெல்லாம்
உடலினுள் பரவுகின்றன
உணர்வலைகள்.
முகங்கள்
ஏனோ நினைவில் இல்லை.
வலை வீசி தேடினால்
சிக்குவது
உருக்குலைந்து போன ஓவியங்களே.

என் முகமும்
மறந்து போயிருக்குமென நினைக்கையில்
துளிர்க்கிறது
பெருமூச்சோடு
சிலசமயம் மகிழ்ச்சி.