பாபநாசம்

ஆயிரம் ரூபாயிற்கு சில்லறை உடனே கிடைத்தது ஆச்சரியம் தான்.
நெரிசல் மிகுந்த டீக்கடையோரம்
கால்களை பார்த்தவாறு
ஒரு மூலையில் அமர்ந்து
பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து
ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.
முதலில் ஒரு மடிப்பு.
இரண்டாக
நான்காக
எட்டாக கிழித்தேன்.

கால்களை பார்க்கக்கூடாது.
வெப்பத்தை உணரக்கூடாது.
வியர்வையை துடைக்கக்கூடாது.
ஓலியினை உணர்தல் வேண்டாம்.

தரையெங்கும் குப்பைக்கூளம்.
கால்களிடையே பறக்கும் கிழிசல்கள்.

ஊழ்த்த இறைச்சி
நும்மிடைப் பாவம் நில்லாவே.