எங்கெங்கும் கண்கள்
சாலையை கடந்து வீட்டிற்குள் நுழைந்து
கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி
கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை
பல கண்களாய்
அவன் கவனித்தபடி இருக்கிறான்.
கண்களை மூடி
கற்பனையில்
வீட்டிற்கு வெளியில் ஓடி
அந்த இரகசிய செய்தியை அறிவிக்கிறேன் நான்.
தூரத்தில் ஆரவாரம் கேட்டது.
எங்கெங்கும் கண்கள்…
சாலையை கடந்து வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை பல கண்களாய் அவன் கவனித்தபடி இருக்கிறான்….