Year: 2010

  • கிழவி சாக போகிறாள்

    தலையில் பலத்த காயம்! இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது! நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி! இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்! சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!

  • வெக்கையுறவு

    வெக்கையுறவு

    ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி தான் நிகழ்கிறது. அவனிடமிருந்து விலகி நான் முதலில் தேடுவது துண்டைத் தான். எப்போதும் கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என நினைத்தாலும் அது பிறகு மீண்டும் நிகழும் வரை நினைவிற்கு வருவதேயில்லை.

  • கணவனது சட்டை அணிந்திருக்கிறான்

    அவனிடமிருந்த வியர்வை வாசனை என்னுடைய கணவனது போலவே இல்லை. என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது.

  • சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்

    கடவுள் இன்றும் லேட் தான். வந்தவர் மதியத்திற்கு மேல் எங்கு போனார் என்று தெரியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது. மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

  • சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?

    கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது. கிராமத்து ஊர் கவுண்டரின் உத்தரவின்பேரில் இந்த முள்வேலி கம்பி கட்டபட்டதாக சொல்லபடுகிறது.

  • சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

    சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

    உலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள். “கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.

  • ஆர்மி கேம்பில் இருந்து மூன்றாவது தெருவில் எனது வீடு

    அவர்களில் பெரும்பாலனோருக்கு என்னுடைய மகன் வயது தான் இருக்கும். அரும்பு மீசை, பள்ளிக்கூடத்து சிரிப்பு, கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம், தூக்கமில்லாத கண்கள் மற்றும் இனம் புரியா கோபம். அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.

  • காந்தி வேண்டாம்! அகிம்சை வேண்டும்!

    வன்முறை என்பது மனிதனோடு உடன் பிறந்ததாய் இருக்கிறது, பயத்தை போலவே. துணிச்சல் மிகுந்தவனிடம் ஒளிந்து இருக்கிறது அபரிதமான பயம். பயந்தவனாய் வாழ்பவனிடமும் பதுங்கி இருக்கிறது அளவிற்கு அதிகமான வன்மம். காட்டில் வாழும் மிருகங்களில் எது வாழ தகுதியுடையவையோ அவை வாழ்கின்றன. மற்றவை காணாமல் போகின்றன. அந்த மிருகங்களில் ஒருவன் மனிதன்.

  • காதலின் துயரம் அழுகையல்ல அது கோபம்

    மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை வண்ணம் தீட்டும் மேங்களிடம் பதுக்கி வைத்தாலும் கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும் வாங்கியும் படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன்.

  • எங்கெங்கும் கண்கள்

    கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை பல கண்களாய் அவன் கவனித்தபடி இருக்கிறான்.