மன்றாடும் கண்களை தவிர்!

எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும்
இன்று மீண்டும்
அந்த விழிகளை பார்த்து விட்டேன்.

சுயத்தை மறந்து
தரையோடு தரையாய்
கரைந்தாற் போல பரிதவிப்பு.

தனது அடுத்த நொடி
இன்னொருவன் கைகளால் எழுதபட போகிறதென பயம்.

சுருண்டு பொசுங்கி புள்ளியாய்,
கடைசி எழுத்திற்குள்
ஒளிந்திருக்கும் இயலாமை.

கண்களால் மன்றாடுவதை தவிர
உடலிலும் உயிரிலும்
வேறு செயலில்லை.

கூர்மையானதொரு ஆயுதம்
என்னுள் ஆழமாய் எங்கோ எதையோ அறுக்கிறது.