பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
யாரென தெரியவில்லை.
இருளை அகற்ற சுவிட்ச்
எங்கிருக்கிறது என புரியவில்லை.
இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை. 

என் துணிகளை தேடி
தரையில் கைகளால் துளாவிய போது
மீண்டும் வந்தது
மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

கண்கள் இருட்டின.
காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
உடலெங்கும் வலி வியாபித்தது.
விஷ முற்கள் கடகடவென
உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

முதுகு தண்டினில்
மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
தரையில் படுத்து துடிக்கிறேன்.
எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
எழுந்து நிற்கிறேன்.

எதையும் அறியாமல் நிர்வாணமாய்
தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
இப்போதும் புலப்படவில்லை.

காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
நான் நிற்பது கட்டாயம்
பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.

ஜன்னலில் ஏறி அமர்ந்தேன்.
என்னுடைய நிர்வாணம் இப்போது நடுங்க வைத்தது.
மீண்டும் புழு மண்டையில் நெளிய காத்திருந்தேன்.
அது நெளிய தொடங்கிய அந்த கணத்தில்
ஜன்னலில் இருந்து வெளியே குதித்தேன்.


Comments
7 responses to “பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை”
  1. D.R.Ashok Avatar

    புரியவில்லை ஆனால் நன்றாயிருக்கிறது

  2. கலையரசன் Avatar
    கலையரசன்

    கவித என்னைக்கு புரிஞ்சிருக்கு?
    இருந்தாலும் நல்லாயிருக்கு!!

  3. Tamil Home Recipes Avatar
    Tamil Home Recipes

    மிகவும் பிரமாதம்

  4. கந்தர்மடம் கவின் Avatar
    கந்தர்மடம் கவின்

    உண்மையில் எனக்கும் கவிதை புரியவில்லைத்தான், ஆனல் ரசித்து வாசிக்ககூடியதாக இருந்தது.
    வாழ்த்துக்கள்.

  5. Sai Ram Avatar

    @D.R.Ashok, @கலையரசன், @Tamil home recipes, @கந்தர்மடம் கவின் – உங்கள் எல்லாருடைய பதிலுக்கும் நன்றி.

    இந்த கவிதையை படித்தவுடன் உங்களுக்குள் ஏற்படுகிற முதல் உணர்வு போதும், அதற்கு மேல் உள்ளே எதையும் நான் ஒளித்து வைக்கவில்லை.

    1. To think, I was coneusfd a minute ago.

  6. அன்பின் சாய்ராம் – ஏதோ ஒரு செயலின் தொடராக இந்நிகழ்வு நடந்திருக்க வேண்டும். அச்செயல் நினைவிற்கு வரவில்லை – அச்செயல் புழுவாக மண்டைக்குள் நெளியத் துவங்கிய பின்னர் தான் அவனால் உணர முடிகிறது – தவறு தற்கொலையில் முடிகிறது கவைதை நடை நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.