அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே அக்கறை எதுவும் கிடையாது

வறுத்தாலும் சரி,
கரித்து கொட்டினாலும் சரி,
நக கண்களை பிடுங்கினாலும் சரி,
உண்மை கசப்பானது தான்.

நாம் வேறு மாதிரி தான் நினைத்து இருந்தோம்.
நம்முடைய கடைசி ஆசை அதுவாக தான் இருந்தது.
நம்முடைய துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
அது தான் நம்முடைய உந்து சக்தியாக இருந்தது.

ஆனால் உண்மை அதுவல்ல.
யதாரத்தம் வேறு மாதிரியாக தான் இருக்கிறது.
அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.

நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
உன்னிப்பாய் கவனித்தால்
அது சர்க்கஸ் முடியும் போது தோன்றும் கரகோஷம் என புரிந்து கொள்ளலாம்.

அடித்தாலும் சரி
நடித்தாலும் சரி
உண்மை கசப்பானது தான்.
மரணம் இனிப்பானது என எவன் சொன்னான்.
இறப்பிற்கு பிறகு நம்மை கொண்டாடுவார்கள் என எவன் சொன்னான்.

அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.