வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.

இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக கூட ஒரே விதமான நிலைபாடுடன் தான் இயங்குகின்றன. அதாவது சந்தர்ப்பவாதம். அப்படியானால் மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் உணர்வுகளை எப்படி பதிவு செய்வார்கள்.

என்னை பொறுத்த வரை ஈழப்பிரச்சனை எந்தளவு தாக்கத்தை தமிழக தேர்தலில் ஏற்படுத்தும் என்பதை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடையும் வெற்றி/தோல்வி/படுதோல்வி இவற்றை கொண்டே அளவிட முடியும்.

ஈழப்பிரச்சனையில் தங்கள் நிலைபாடு இந்த தேர்தலில் தங்களுக்கு பலவீனமாக மாறும் என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து இருக்கிறது. அதனாலே ப.சிதம்பரம் ஈழப்பிரச்சனைக்கு தாங்கள் தலையிட்டு மனித உரிமை மீறலை தடுத்தது போல தற்போது பேச தொடங்கி இருக்கிறார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பல காட்சிகள் மாறி இருக்கின்றன. அரசியல் தலைமையகங்கள் சற்று நடுக்கத்துடன் தான் இருக்கின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு பிறகு மாற்றபடுவது இந்த நடுக்கத்தினை தான் வெளிபடுத்துகிறது. காய் நகர்த்தலின் ஒரு கட்டத்தில் கூட தவறு இழைக்கபட கூடாது என எல்லாரும் நினைக்கிறார்கள். இதனாலே எல்லாருமே தாங்கள் ஈழப்பிரச்சனையில் தீர்வு காண விரும்புகிறோம் என்கிற தோற்றத்தை வெளிபடுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவே ஈழப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்குமளவு தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து இருக்கிறார் என்றால் ஈழப்பிரச்சனையின் தாக்கம் வருகிற தேர்தலில் கடுமையாக இருக்கும் என்பதினால் தானே.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஈழத்தில் இருந்து வரும் செய்திகளை பொறுத்து இந்த தாக்கத்தின் வீரியம் அதிகரிக்க கூடும்.

தேர்தலில் ஈழப்பிரச்சனை தாக்கமேற்படுத்தும் என்றாலும் தேர்தலுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழக அரசியல் தலைமையகங்கள் ஈழப்பிரச்சனையில் அதே சந்தர்ப்ப வாதத்துடன் தான் இயங்கும் என்பது குரூரமான யதார்த்தம்.


Comments
6 responses to “வருகிற தேர்தலில் ஈழப்பிரச்சனை பிரதான தாக்கம் ஏற்படுத்துமா?”
 1. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நேற்று வரை பதவிக்காக காங்கிரசோடு ஒட்டியிருந்த பா.ம.க இன்று கூடுதல் இடங்களுக்காக மட்டுமே அ.தி.மு.க. வோடு இணைந்துள்ளது. நேற்று வரை தமிழீழ எதிர்ப்பு காட்டிய செயலலிதா வாக்குகளுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்.காங்கிரசை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, “மதவாத பா.ச.க வைத் தடுப்பதற்காக” அவர்கள் காங்கிரசோடே கூட்டணி சேர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.எல்லா கூட்டணிகளுமே சந்தர்ப்பவாத கூட்டணிகள் தான் என்பதால் எதை எதிர்த்து எதற்கு வாக்களிப்பது என்று நடுநிலையான மக்கள் குழம்பியுள்ளனர்.

 2. Sai Ram Avatar

  அன்பு ரவிசங்கர்,தங்கள் மறுமொழிக்கு நன்றி!நீங்கள் சொன்னதை தொடர்ந்து சொல்வதாக இருந்தால், மக்களுக்கு எதை கண்டு குழம்புவது என விவஸ்தை கிடையாது. ஜவுளிக்கடையில் மணிக்கணக்காய் ஒரு புடவையை தேர்வு செய்ய அலசும் மக்கள் ஏன் தேர்தலில் அந்த அக்கறையை காட்டுவதில்லை என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

 3. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நாலு கடை ஏறி இறங்கினாலும் நல்ல துணி கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கை அரசியலில் இல்லையே? எல்லா கடையிலும் ஒரே துணி 🙁

 4. ஸ்ரீ Avatar
  ஸ்ரீ

  //ஜவுளிக்கடையில் மணிக்கணக்காய் ஒரு புடவையை தேர்வு செய்ய அலசும் மக்கள் ஏன் தேர்தலில் அந்த அக்கறையை காட்டுவதில்லை என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.//

  நல்ல வேட்பாளரை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று சொல்பவர் யாரும் நல்ல வேட்பாளரை காட்டுவதில்லை. ஏனென்றால் நல்ல வேட்பாளர் இல்லை!

 5. ஸ்ரீ Avatar
  ஸ்ரீ

  நாலு கடை ஏறி இறங்கினாலும் நல்ல துணி கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கை அரசியலில் இல்லையே?
  எல்லா கடையிலும் ஒரே துணி 🙁

  இதான்பா மேட்டர்!!!

 6. ஸ்ரீ Avatar
  ஸ்ரீ

  ditto

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.