குற்றவுணர்வின் கண்கள்

மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம்
ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர்.
போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை.
காகிதம் தான்.
விரிகின்றன என் கண்கள்.
ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள்.

நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும்
யாருமற்ற பாலைவனத்திலும்
எனது முதுகில் உணர்ந்து திரியும் நான்.