மரண தேவதை விழித்து இருக்கிறாள்

பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
சூறாவளி நாளுக்கு அடுத்த தினம்.

இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
சூறாவளியை போர்வையாய் போர்த்தி
எல்லை தாண்டலாம் என்கிற கனவு
இனி பலிக்காது.

துப்பாக்கி ஏந்தி ஒரு காக்கி கூட்டம்
எறும்பு வரிசையாய் தூரத்தில் தெரிகிறது.

ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
முறுக்கு கம்பிகள்
இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
காத்து இருக்கின்றன.
வேலியினூடாக
மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
துப்பி துப்பி தயாராகி விட்டன.

நான் ஓட வேண்டும்.
அவகாசமில்லை.

மழை தெளித்த வீட்டின் முகப்பில்
தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
தன் அழுகையை ஓளித்து வைத்து
காத்து இருப்பாள் என் மனைவி
இறந்து போன மகளின் படத்தோடு.


Comments
One response to “மரண தேவதை விழித்து இருக்கிறாள்”
  1. ஆதவா Avatar
    ஆதவா

    ஆஹா….. என்ன அருமையான கவிதை இது….ஈழ தமிழனையும் தமிழச்சியையும் கண்முன்னே நிறுத்ததககறது//அந்த இறுதி பத்தியின் சோகத்தை எதிர்பார்க்கவேயில்லை… மிக அற்புதமான கவிதை……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.