அஞ்சால் அலுப்பு மருந்து

முதலாளி தன் மனைவிக்கு
வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
உதிர வாசம்!

உதிரம் திருடப்பட்டவர்கள்
மாலை நேரம் வீடு திரும்புகையில்,
கதவை திறக்கும் போது படியும்
உடற்களைப்புடனான மன சலிப்பு!

அஞ்சால் அலுப்பு மருந்தினை
உட் கொண்டு
களைப்பையும் சலிப்பையும்
டாஸ்மாக்கில் ஊற்றி
வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

நம் மனைவிமார்களின் கண்ணீரை
அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!